சென்னை கமலாயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்திய மக்கள் முன்னேற கட்சி தலைவரான அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அர்ஜூன மூர்த்தி அவர்கள் நம்முடைய சித்தாந்தத்தை கொண்டவர். அவர் மீண்டும் நம் கட்சியில் இணைவதை வரவேற்கிறோம். 

Continues below advertisement


மின்கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்பதாக கூறுவது கபட நாடகம் போல் தோன்றுகிறது. கருத்து கேட்கிறோம் என்று கபட நாடகத்தை நிறுத்திவிட்டு ஏற்றிய மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியால் 30 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதை உடனடியாக தடை செய்ய வேண்டும். இதற்கு கருத்து கேட்கிறோம் என்று கருத்து கேட்காமல், தடைசெய்ய வேண்டும். இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்பது பெரிய விவாதமாக உள்ளது. மோடி அவர்கள் வழங்கிய கேஸ் அடுப்பு , குடிநீர் வழங்குதல் இலவலசம் அல்ல.. அடிப்படை உரிமை” என்றார்.