லைகர் படமும் ஹவாலா பணமும்
லைகர் படத்தில், வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் பிறகு லைகர் படத்தின் தயாரிப்பாளர்களான பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு தனித்தனியாக விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து லைகர் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிற்கும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதனடிப்படையில், ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். லைகர் படம் படுதோல்வி அடைந்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்திற்காக ஹவாலா பணத்தை முதலீடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிமாண்டி காலனி 2
டிமாண்டி காலனி படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் அஜய் தெரிவித்தார். மேலும் படத்தை கோப்ரா படத்தில் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குநர் வெங்கி வேணுகோபால் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதை , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை அஜய் ஞானமுத்து கவனிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் அஜய் ஞான முத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘கோப்ரா’ படம் வெளியானது. ஆனால் இந்தப்படம் எதிர்பாராத வெற்றியை பெறாமல், படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் துவண்டு போன, அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி படத்தின் இராண்டாம் பாகத்தை தானே இயக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். நேற்று இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ரஷ்யாவிற்கு சென்ற புஷ்பா படக்குழுவினர்
அதீத வெற்றி பெற்று இந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய புஷ்பாவின் முதல் பாகத்தை ரஷ்யாவில் ரிலீஸ் செய்வதற்காக புஷ்பா படத்தின் குழுவினர் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். ரஷ்யாவில் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ப்ரிமியர் ஷோக்கள், டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. அதுபோக, மாஸ்கோ நகரில் டிசம்பர் 1 ஆம் தேதியிலும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 3 ஆம் தேதியிலும் ஸ்பெஷல் ப்ரிமியர் ஷோ திரையிடப்படவுள்ளது.
ஏ.ஆர்.ஆரின் படைப்பை ரசித்த ரஜினிகாந்த்
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.
நயன் தாரவின் “கோல்ட்” பட சிக்கல்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள மலையாள திரைப்படம் கோல்டு. தமிழ் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 1 வெளியாக தயாராக இருக்கும் இப்படத்தின் தமிழ் வர்ஷன் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோல்ட் படத்தின் தமிழ் வர்ஷன் டிசம்பர் 2ம் தேதி(நாளை) வெளியிடப்பட உள்ளது. எனினும் இப்படத்தின் மலையாள வர்ஷன் அறிவித்த படி, டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் டப்பிங் செய்யப்பட்ட கோல்ட் படத்தின் தமிழ் வர்ஷனின் சென்சார் ப்ராசஸ் தாமதமானது தான் இந்த ரிலீஸ் தேதி தள்ளி போவதற்கான காரணம். இருப்பினும் கோல்ட் படத்தின் மலையாள வர்ஷன் இன்று உலகெங்கிலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் மட்டும் இன்று வெளியிடப்படும்.