தெலுங்கின் முன்னனி இயக்குநரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில் லிகர் என்ற திரைப்படத்தில்  விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கும் நிலையில், ரம்யா கிருஷ்ணன். ரோனிட், விஷூ ரெட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


50 முறை குத்துச்சண்டை பட்டம் வென்ற சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், இந்தப்படத்தில்  வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 20 ஜனவரி 2020ல் படம் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.


இதற்கிடையே 15 செப்டம்பர்2021 அன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து படத்தில் மைக் டைசனும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகின. இந்த நிலையில் அந்தப் படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளது.