அஜித் குமார் நடிப்பில் , ஹச்.வினோத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. வலிமை படத்திற்கான ஹைப் எந்த அளவு இருந்தது , இருக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது. இந்த சூழலில் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.  


அப்டேட்.. அப்டேட் என காத்துக்கிடந்த ரசிகர்கள்,  எப்போதாம்பா ட்ரைலர் வெளியிடுவீங்க என காத்திருந்தனர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழு ட்ரைலர் வெளியீட்டு தேதியினை நேற்று காலை அறிவித்தது. சோனி மியூஸிக் சவுத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உங்களது ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்க்ரீனுடன்  தயாராக இ்ருங்கள் ..பெருங்கோபம் இன்று  மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது “ என வலிமை படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.


அதன்படி நேற்று மாலை ட்ரைலர் வெளியானது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே ட்ரெய்லர் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது.  ஹெச். வினோத்துக்கே உரித்தான இண்வெஸ்டிகேஷன் ஜானரில் ட்ரெய்லர் அமைந்திருந்தது.  “ஏழையா இருந்து உழைச்சு சாப்புடுற எல்லாத்தையும் கேவலப்படுத்தாத.” “ உயிர எடுக்குற உரிமை நமக்கு இல்ல..” “ வலிமை அப்படிங்கிறது ஒருத்தன காப்பாத்ததான்.. அழிக்க இல்ல..”.



”தான் உண்டு தான் வேல உண்டு அப்படினு இருக்குறவனோட சமநிலை தவறுனா அவனோட கோபம் எப்படி இருக்குணு காட்டுவேன்..” என ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த வசனங்கள் கவனம் ஈர்த்தன. குறிப்பாக  ட்ரெய்லரில் இடம்பெற்ற பைக் ஸ்டண்ட் காட்சிகள் பிரமிக்க வைத்தன.


 






வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை தொட்ட வலிமை ட்ரெய்லர் ட்ரெய்லரை தற்போது வரை (31-12-2021) 8,458,762 பேர் பார்த்துள்ளனர்.