விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள லியோ படத்திற்கு வெற்றி விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நவம்பர் ஒன்றாம் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், விஜய் கலந்து கொள்ள உள்ளதால் விழாவில் பாதுகாப்பு கேட்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல்நிலையத்தில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கடைசி நேரத்தில் லியோ ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், படத்தின் வெற்றி விழா கொண்டாட போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.