Naa Ready Song Lyrics: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திலிருந்து நா ரெடி எனும் பாடல் வெளியாகி உள்ள நிலையில் அதில் இடம்பெற்றுள்ள வரிகள் குறித்து நாம் காணலாம்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘லியோ’. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், ஜோஜூ ஜார்ஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படமானனது அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு லியோ படத்தில் இருந்து ”ஆல்டர் ஈகோ நா ரெடி” பாடல்  வெளியாகியுள்ளது. விஷ்ணு எடாவன் எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இதில் இடம் பெற்றுள்ள ராப் வரிகளை பிக்பாஸ் புகழ் ‘அசல் கோலார்’ பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தினேஷ் மாஸ்டர் நடன காட்சிகளை அமைக்கும் இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து 2 ஆயிரம் பேர் நடனமாடியுள்ளனர். 


இப்படியான நிலையில் பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் குறித்தும், லியோ படத்தில் இடம் பெறும் காட்சிகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


விஜய்யின் அரசியல்


 



  • நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் இறங்கி வரவா  (இதுவே பின்பகுதியில் "அண்ணன் நான் தனியா வரவா" என எழுதப்பட்டுள்ளது)

  • எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா

  • ஊருக்குள்ள எனக்கொரு பேர் இருக்கு கேட்டாலே அதிரும் பார் உனக்கு

  • போஸ்டர் அடி ... அண்ணன் ரெடி... கொண்டாடி கொளுத்தணும் டி


நா ரெடி பாடலில் இடம் பெற்றுள்ள இந்த வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை மையப்படுத்தி எழுதியது போல உள்ளது. 


லியோ படத்தில் இடம் பெறும் காட்சிகள்



  • தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா ( விக்ரம் படத்தில் சூர்யாவின் கழுத்தில் தேள் டாட்டூ இடம் பெற்றிருக்கும். இதனால் இந்த படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் இணைவது உறுதியாகியுள்ளது)

  • கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு.. அதுதான் கணக்கு

  • இந்தக் கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச் எனக்கு... புரியுதா உனக்கு

  • ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணிலை கட்டி லாரி ல ஏத்தி அறுத்து போட அனுப்பிடுவோம் ஃபேக்டரிக்கு என படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பியிருப்பதை குறிப்பதாக உள்ளது. 


லோகேஷ் ஸ்டைல்


ஆடு, சாராயம், பீடி, சுருட்டு, புகையிலை,சூதாட்டம்,  போன்ற வார்த்தைகளும், பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாவை கொண்டாங்க சியர்ஸ் அடிக்க.. என்ற வரிகளும் லோகேஷ் படங்களில் இடம் பெறும் மது, போதைப் பொருட்கள் தொடர்பான காட்சிகளுக்கு அடிப்படையாக உள்ளது. 


மேலும் படிக்க: ALSO READ: Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்