கடந்த  ஜூன் 18 ஆம் தேது தந்தையர் தினம் நிறைவுபெற்ற நிலையில் தனது மறைந்த தந்து தந்தைக்கு சற்று தாமதமான வாழ்த்து மடல் ஒன்றை எழுதியுள்ளார் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான். உலகமே சிறந்த நடிகர் என்று பாராட்டும் ஒருவர் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த தந்தையாகவும் இருந்திருக்கிறார் என்பதையே பபில் கானின் இந்தப் பதிவு  நமக்கு உணர்த்துகிறது.


பபில் கான் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இர்ஃபான் கான் விருது ஒன்றை தனது கையில் வைத்துக்கொண்டு அதனை பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து  இப்படி பதிவிட்டுள்ளார்.






“ தனக்கு கிடைத்த அங்கீகாரத்தின் சின்னத்தை பார்க்கிறது உங்களுடைய கண்கள். ஆனால் இந்த அங்கீகாரம் உங்களுக்கு கிடைப்படதற்கு முன்பே சுய மதிப்பீடு வெளியில்  இருந்து வருவதில்லை உள்ளார்ந்த அர்த்தத்தில் இருந்து வருவது என்பதை நீங்கள் எப்போதோ உணர்ந்துவிட்டீர்கள்.  பிழைப்பிற்கான போராட்டத்தில் இருந்து விடுபட்டு அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு படைப்பின் உள்ளுணர்வை அடைவதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதையும் போராடிவீட்டீர்கள். இருந்தும் ஒரு பிரபலமான வாழ்க்கையில் ஏற்படும் கட்டாயத்தை விரும்பி நீங்கள் அனுபவிக்க விரும்பியதற்காக நான் உங்களை குற்றம்சாட்டுவேன். என்ன நடக்கப்போகிறது என்று உங்களுக்கு நிச்சயமாக தெரிந்தபோது  அதில் உள்ள நிச்சயமின்மையை நீங்கள்  நம்பினீர்கள். உங்களது இந்த குணத்தையே ஒரு நடிகனாக நான் என்னுள் தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறேன். ஒரு கதை திட்டவட்டமான ஒரு விவரனையைக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த கதையின் கட்டமைப்பிற்குள்  நுழைந்து செய்யும் செயற்கையான முனைப்புகளில்தான் அதிசயம் நிகழ்கிறது.


”நீங்கள் என்னையும் அயானையும் சில நேரங்களில் கண்களில் ஒரு மிளிர்வுடன் பார்ப்பதை  நான் கவனித்திருக்கிறேன். இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லாததைப்போல் நீங்கள் எங்களை பார்ப்பீர்கள். ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் வேண்டுவதைவிட அதிகமாகவே நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஒரு நடிகனாக இருந்ததை நீங்கள் விரும்பியதை விட ஒரு தந்தையாக  இருப்பதில் நீங்கள் அதிகம் பெருமை கொண்டீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த உலகத்தில் சிறந்த நடிகனாக இருந்தபோதும் உங்களுடைய அக்கறைகளை நான் முழுவதுமாக அங்கீகரிக்கவில்லை என்பதாக உணர்கிறேன். ஐ மிஸ் யு அப்பா.”


பபில் கான்


கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான படத்தில்  நடிகராக அறிமுகமானா பபில் கானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.