விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகி வரும், லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ”:நா ரெடி” (LEO First Single Naa Ready Song) பாடல் வெளியாகியுள்ளது.


நா ரெடி பாடல்:


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடாவன் எழுதியுள்ள இந்த பாடலை, விஜய் பாடியுள்ளார்.  நா ரெடி தான் வரவா, எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா எனும் இப்பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையைக் குறிக்கும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பாடல் முழுவதும் தரை லோக்கலாக பாடியுள்ள விஜய், அவர் தனது கதாபாத்திரத்தையே மாற்றப்போகிறார் என கூறும் விதமாக இந்த பாடலின் நோக்கம் அமைந்துள்ளது. யூடியூபில் வெளியான உடனேயே இந்த பாடலை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் டிரெண்டாக தொடங்கியுள்ளது.



பிரமாண்ட எதிர்பார்ப்பில் லியோ:


மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அனிருந்த் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.  இதன் மூலம், விஜயுடன் ஐந்தாவது முறையாக திரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்:


இந்நிலையில், நடிகர் விஜயின் 49வது பிறந்தநாளையொட்டி, லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ”ஆல்டர் ஈகோ நா ரெடி” பாடல் ஜுன் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதில், விஜயின் புகைப்படம் அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது. அதைதொடர்ந்து, கடந்த 20ம் தேதி ”ஆல்டர் ஈகோ நா ரெடி” பாடலின் புரோமோவையும் வெளியிட்டது. அதன் மூலம், இந்த பாடலை விஜயே பாடி இருப்பது உறுதியானது.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:


விஜயின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பனிப்படர்ந்த பகுதியில் விஜய் அதிரடியாக சண்டையிடுவது போன்ற அந்த போஸ்டர் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக நா ரெடி பாடல் தொடர்பான இரண்டாவது புகைப்படத்தையும் வெளியிட்டது. அததொடர்ந்து தற்போது, நா ரெடி பாடல் அதிகாரப்பூர்வமாக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து, விரைவிலேயே படத்தின் டீசர், டிரெய்லர் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.