எம்.ஜி.ஆர். ரஜினி ஆகியவர்களுக்குப் பிறகு அதிகளவிலான குடும்ப ரசிகர்களைக் கொண்ட நடிகராக விஜய்(Vijay) இருக்கிறார். எத்தனையோ நடிகர்கள் இருந்தும் ஏன் வெகு சிலருக்கு மட்டுமே அனைத்து தரப்பு மக்களுக்கான நடிகர்களாக மாறுகிறார்கள்.


குழந்தைகளை கவர்தல்


”ஒரு ஆறு வயது குழந்தைக்கு ஒன்றை உங்களால் விளக்க முடியவில்லை என்றால் நீங்களே அதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்” இது ஐன்ஸ்டைனின் கூற்று. எந்த ஒன்று குழந்தைகளால் அங்கீகரிக்கப்படுகிறதோ அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். விஜய் எல்லா குடும்பங்களுக்கும் பிடித்தமான நடிகராக இருப்பதற்கு முக்கியமான காரணம் அவர் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்திருப்பதனால்தான்.


கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு, போக்கிரி படத்தில் போக்கிரிப் பொங்கல், திருப்பாச்சி படத்தில் நீ எந்த ஊரு  என அவரது படத்தில் குழந்தைகளின் வாய்களில் முணுமுணுக்கும் ஒரு பாடலாவது இடம்பெற்றிருக்கும். படங்களில் குழந்தைகளை தனது நண்பராக நடத்தும் விஜயின் பாவனை  அனைவரின் மனதையும் கவர்ந்தது.


செண்டிமெண்ட்களை விட்டுக்கொடுக்காதது.


இன்று விஜய் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். எத்தனையோ கதைகள் அவரை தேடி வருகின்றன. எத்தனை ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸுக்காக இடையிடையில் ஒரு படம் நடித்து வருகிறார் விஜய்.


பகவதி  படத்தில் தம்பி பாசம். திருப்பாச்சி படத்தில் தங்கை பாசம், சிவகாசி படத்தில் அம்மா பாசம், நண்பர்களை பற்றிய ஃப்ரண்ட்ஸ், நண்பன் காதலுக்கு மரியாதை கொடுக்கும் ஷாஜஹான் ,  அண்மையில் வெளியான  வாரிசு வரை குடும்ப குடும்பமாக ஆடியன்ஸை கவரும் கதைக்களத்தில் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார் விஜய்.


ஒரே ஆள்.. பல திறமைகள்


போக்கிரி மாதிரியான படங்களில்  மாஸான ஹீரோவாக, குஷி, காவலன் போன்ற திரைப்படங்களில் ரொமாண்டிக் ஆன நபராக  வசீகரா, சச்சின் போன்ற படங்களில் குறும்புக்கார இளைஞனாக, சிறந்த டான்ஸராக, பாடகராக என எல்லாவற்றையும் ஒரே ஆளாக செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் திறன்கொண்டவர் விஜய்.


குட்டி ஸ்டோரி


திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சினிமாவிற்கு வெளியிலும் மக்களை உற்சாகப்படுத்தி வருபவர் விஜய். மிக அரிதாக மட்டுமே மனம் திறந்து பேசும் விஜய் தான் எடுத்துக்கொள்ளும் கொஞ்சநேரத்தில் சுவாரஸ்யமாக அதே நேரத்தில் பயனுள்ள விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்ல முயற்சிப்பவர். அதை அவரது ஸ்டைலில் குட்டி ஸ்டோரிகளாக சொல்வது இன்னும் சிறப்பு.


மாறாத இளமை


சில நடிகர்கள் வயது ஆக ஆகத்தான் இன்னும் அழகாகிக்கொண்டு போகிறார்கள். ரஜினியை உதாரணமாக சொல்லலாம். இன்று விஜய்க்கு 49 வயதாகிறது ஆனால் பார்ப்பதற்கு கல்லூரி மூன்றாமாண்டு முடித்து வெளியேறிய புதுப்பொலிவுடன் இருக்கிறார். ஒருபக்கம் ரசிகர்கள் அவரது விண்டேஜ் லுக்கை ரசித்துக்கொண்டும் மறுபக்கம் தற்போது இருக்கும் க்யூட்டான லுக்கை ரசித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.


ALSO READ: Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்