தலைவர் 171


லியோ திரைப்பத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 (Thalaivar 171) படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ், ரஜினியை எந்த மாதிரியான ஒரு உலகத்துக்குள் காட்டப் போகிறார் என்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. தலைவர் 171 படம் குறித்து ஒரு சில தலவல்களை லியோ படத்தின் ப்ரோமோஷன்களில் பகிர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்!


2015இல் எழுதிய கதை..


மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் தற்போது லியோ என இதுவரை மொத்தம் ஐந்து படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.  மாநகரம் படத்தின் கதையைத் தவிர்த்து தான் இயக்கிய நான்கு படங்களும் மேலும் தான் அடுத்து இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் கதையையும் ஒரே காலத்தில் எழுதியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ”மாநகரம் படத்தை 2015ஆம் ஆண்டு  நான் இயக்கிவிட்டேன் ஆனால் 2017ஆம் ஆண்டு தான் அந்தப் படம் வெளியானது. இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நான் பல கதைகளை எழுதினேன்.  நான் இயக்கிய ஐந்து படங்களும் இந்தக் காலத்தில் எழுதிய கதைகள் தான். 


என் நண்பர் நடிக்க வேண்டிய கதை!


தற்போது நான் இயக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் கதையும் இந்தக் காலத்தில் நான் எழுதியது தான். அப்போது ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து நான் இந்த கதையை எழுதவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இந்தப் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்தப் படத்தில் தான் இப்போது ரஜினி நடிக்கிறார்.


இப்போதைக்கு என்னிடம் 20 முதல் 25 பக்கங்களுக்கான கதையின் கட்டமைப்பு என்னிடம் இருக்கிறது. இதைதான் 200 பக்கத்திற்கு நான் டெவலப் செய்ய வேண்டும். மேலும் இந்தப் படத்தின் சில காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்“ என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


இந்தப் படத்திற்கான முழு திரைக்கதை எழுத என்னிடம் மொத்தம் 6 மாதங்கள் கையில் இருக்கின்றன. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புத் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


தலைவர் 170


தற்போது ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் தலைவர் 170இல் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்தப் படத்தின் படபிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்து வருகிறார்கள்.


அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சமூக கருத்துள்ள நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக இந்தப் படம் இருக்கும் என்று படம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்தார். அடுத்த ஆண்டும் தீபாவளிக்கு தலைவர் 171 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் படிக்க : அது என்னுடைய நண்பர் நடிக்க வேண்டிய கதை...தலைவர் 171 குறித்து லோகேஷ் கனகராஜ்


Anbil Mahesh: ‘அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் - தம்பி நாங்கள்’... ஆசிரியர்கள் பற்றி அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி..!