லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.30 ஆம் தேதி  (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இரண்டாம் முறையாக இணைந்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் த்ரிஷா, விஜய் - சஞ்சய தத், விஜய் -அர்ஜூன் என புதிய  மற்றும் எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் காம்போக்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை எதிர்நோக்கியும் மற்றொருபுறம் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடந்த வாரம் முழுவதும்  லியோ போஸ்டர் திருவிழா எனும் பெயரில் கதைக்கான ஹிண்ட் கொடுத்து நான்கு போஸ்டர்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில், இந்த வார இறுதியில் செப்.30ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.


விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் வழக்கமாகவே விஜய் ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்பட்டு பேசுபொருளாகி இணையத்தில் கவனமீர்க்கும். இந்நிலையில், இசை வெளியீட்டுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், இதற்காக சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கம் முழுவீச்சில் தயாராகி வரும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளி வருகின்றன.


 






மேலும், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகளையும் இணையத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.