காமெடி நடிகர் செந்திலின் மகன் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
90 கிட்ஸ்களின் பேவரைட் காமெடி செந்தில், கவுண்டமணி காமெடி தான். இருவரின் காமெடிகளும் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. கரக்காட்டக்காரனில் வரும் கவுண்டமணி, செந்தில் காமெடி என்றென்றும் எவர்கிரீன் தான். தனது காமெடி நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்தான் நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் சேர்ந்து அப்பாவியாகவும், குசும்பாகவும் நடித்து நகைச்சுவையை ரசிக்க வைத்தவர். 1979ம் ஆண்டு வெளிவந்த பசி படத்தின் மூலம் அறிமுகமான செந்தில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் செந்தில் மகன் மணிகண்ட பிரபு பங்கேற்றிருந்தார். அதில் பேசிய அவர், தனது குடும்பத்தில் யாருமே படித்தது இல்லை என்றும், தான் மட்டுமே படித்து மருத்துவராகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளதாக குறிப்பிட்ட மணிகண்ட பிரபு, அதன் பிறகு முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி மருத்துவராகியுள்ளேன் என்றார்.
மணிகண்ட பிரபு, ஜனனி என்ற பெண்ணை காதலித்ததாகவும், அவர் மருத்துவர் என்பதால், ஜனனியின் தந்தை மருத்துவருக்கு தான் தன் மகளை திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக இருந்தார். அதனால் நான் பல் மருத்துவருக்கு படித்தேன். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜனனியை திருமணம் செய்து கொண்டேன் என்பதையும் மணிகண்ட பிரபு குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை செந்தில் ஆசைப்படி மருத்துவரானதாக குறிப்பிட்டுள்ள மணிகண்ட பிரபு, தன்னால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருவதாகவும் பேசியுள்ளார். நீண்ட நாட்களாக செந்திலை மீண்டும் நடிக்க சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தி வந்ததாகவும், தற்போது தனது தந்தை ரீ எண்ட்ரி கொடுப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் மணிகண்ட பிரபு தெரிவித்துள்ளார். மேலும் செந்தில் ஆரம்பத்தில் இருந்த அதே எனர்ஜியோடு தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2018ம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த செந்தில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்தார். அடுத்ததாக பிஸ்தா, சந்தானம் நடித்த கிக் மற்றும் பாபி சிம்ஹா நடித்துள்ளா தடை உடை படத்தில் செந்தில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: Siddharth - Shivarajkumar: மிகுந்த மனவேதனை... சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார்!