நயனும், சம்முவும்தான் மிஸ்ஸிங்! அண்ணாச்சி படத்தின் ஆடியோ லாஞ்சில் 10 நடிகைகள் நடனம்..!

லெஜண்ட் சரவணா நடிக்கும் தி லெஜண்ட் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரும், லெஜண்ட்ஸ் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளருமானவர் லெஜண்ட் சரவணா. தன்னுடைய கடைகளின் விளம்பரங்களுக்கு தானே நடித்து பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர். தொடர்ந்து விளம்பர படங்களில் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக நடித்து வந்த லெஜண்ட் சரவணா லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Continues below advertisement

அஜீத் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி இந்த படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலரும், இசை வெளியீட்டு விழாவும் நாளை மறுநாள் ( வரும் ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.


சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணாவுடன் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகள் 10 பேர் பங்கேற்று நடனமாட உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, ஹன்சிகா மோத்வானி, பூஜா ஹெக்டே, லட்சுமிராய், ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஊர்வசி ரெடேலா ஆகியோர் பங்கேற்று நடனம் ஆட உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து “மொசலோ மொசலு” என்ற பாடலும், “வாடிவாசல்” என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.


நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகில் எந்த படத்திற்கும் இசையமைக்காத ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படம் மூலமாக மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். லெஜண்ட் படத்தில் நாயகன் லெஜண்ட் சரவணனுடன் நடிகர் பிரபு, மறைந்த நடிகர் விவேக், நடிகர் மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, கோவை சரளா, காளி வெங்கட், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். நாயகியாக ஊர்வசி ரெடேலா மற்றும் கீதிகா நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜூசுந்தரம் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். எடிட்டர் ரூபன் எடிட் செய்துள்ளார்.

இந்த படத்தின் இசை வௌியீட்டு விழாவிற்கு வெளியீட்டு போஸ்டரில் பேன் இந்தியா திரைப்படம் என்றும், பேன் இந்தியா நடிகர்கள் பங்கேற்பு என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப். படங்களின் வெற்றியால் பேன் இந்தியா என்ற வார்த்தை திரையுலகில் பிரபலமாகி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola