மாடலாக இருந்து நடிகையாக மாறிய மஜும்தார் கடந்த புதன்கிழமை டம்டமில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மற்றொரு பெங்காலி நடிகை பல்லவி டே மே 16 அன்று தெற்கு கொல்கத்தா வீட்டில் இறந்து கிடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து நாகர்பஜார் போலீசார் விசாரணையை தொடங்கி, மஜும்தாரின் மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


பிதிஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆர்ஜி கார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடிகை கடந்த நான்கு ஆண்டுகளாக டம்டம் என்ற இடத்தில் வாடகைக்கு குடியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகையின் வீடு நைஹாட்டியில் உள்ளது.


நடிப்பு


மாடலிங் துறையில் பிரபலமான முகமான பிதிஷா, 2021 இல் அனிர்பேட் சட்டோபாத்யாய் இயக்கிய "பார்- தி க்ளோன்" திரைப்படத்தில் அறிமுகமானார். பிரபல நடிகர் தேப்ராஜ் முகர்ஜி குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.


“ஏன் இப்படி செய்தாய், நேற்றுதான் Facebook dp, cover pic, instagram dp ஆகியவற்றை மாற்றிவிட்டாய்.. சீரியல் நடிகை பல்லபி டேய் தற்கொலை செய்துகொண்ட பிறகு இப்படி ஒரு அவசர நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பதிவிட்டிருந்தாய்.. இப்போது தானே அதைச் செய்தாய். அதே விஷயம்" என்று மாடல் சாந்து மோண்டல் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.


தற்கொலை


இந்த இரண்டு மரணங்களும் திரையுலகில் மன அழுத்தத்தின் தீவிரப் பிரச்சினையில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. பல்லவி டே தனது நண்பர் ஷாக்னிக் சக்ரவர்த்தியுடன் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.


பல்லவியின் மரணத்திற்குப் பிறகு, "என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று பிதிஷா ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் டேய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060).


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண