’தி நைட்டிங் கேர்ள் ஆஃப் பாலிவுட்” என புகழ் பெற்றவர் பாடகி லதா மங்கேஷ்கர். திரைத்துறையில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக கோலோச்சி வரும் இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும்  தாதா சாகிப் விருது, தேதிய விருதுகள் உள்ளிட்ட பல எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இசைத்துறைக்கான டாக்டர் பட்டமும் இவருக்கு கிடைத்தது. பாடகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், மாநிலங்களவை உறுப்பினர் என பல அவதாரங்களை எடுத்தவர்.தமிழ், ஹிந்தி, தெலுங்கு என  20 மொழிகளில்  ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.



பெரும் புகழுக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர்,  உலக இசை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட  நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.  வாழ்க்கைகான வெற்றி சூத்திரத்தை பகிர்ந்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர். “கடின உழைப்புதாங்க வெற்றிக்கு வித்து, கடின உழைப்பை தவிற வேறு எதுவுமே வெற்றி பெற முடியாதுனு நான் நம்புகிறேன் “ என்றார். தன்னிடம் பலரும் ஆலோசனை கேட்பதை குறிப்பிட்ட லதா மங்கேஷ்கர். “ ஆலோசனை வழங்க நான் யார் ? தனிநபருக்கான வாழ்க்கை போராட்டம் என்பது வெவ்வேறானது, எனது வாழ்க்கையில் வெற்றியை கொடுத்த ஒன்று உங்கள் வாழ்க்கையை தோல்வி பாதைக்கு இட்டுச்செல்லவா” என தனது அனுபவ பாடத்தை இன்முகத்துடன் பகிர்ந்துள்ளார்.



இளம் வயதிலேயே தந்தை தவறியதால் , குடும்ப பாரம் முழுவதும் மூத்த பெண்ணான லதா மங்கேஷ்கர் தலைக்கு வந்துவிட, பாடத்தெரியும் என்ற ஒற்றை நம்பிக்கையுடன்  இசைத்துறையை நாடியுள்ளார்.  பருத்தி சேலையும் , ஒரு ஜோடி காலணிகளுடனும் மும்பை ஸ்டூடியோ வாசல்களை ஏறி இறங்கிய காட்சிகள் காலங்கள் உருண்டோடினாலும்  நினைவுகளை விட்டு  நீங்குவதில்லை என  தனது ஆரம்பகாலங்களை அசைப்போட்டுள்ளார் லதா. பசியுடன் ஸ்டூடியோ வாசலில் காத்திருக்கும் லதா மங்கேஷ்கருக்கு,  நஷாத் மற்றும் சஜ்ஜாத் உசேன் என்ற இசையப்பாளர்கள்தான் இவருக்கு அடிக்கடி உணவுகளை வாங்கிக்கொடுப்பார்களாம்.



கலைஞனாக உள்ள ஒவ்வொருவரும் நிறைய போராட்டங்களை சந்திக்க நேரிடும்.அவற்றை கடந்து வந்தால்தான் சாதிக்க முடியும் என  தெரிவித்த லதா மங்கேஷ்கர்.தனது ஸ்டூடியோ அனுபவர் குறித்து தெரிவித்தார். தனது இளம் வயதில் இசை முழுக்க முழுக்க மனிதர்களை நம்பியிருந்தது. ஆனால் இப்பொழுது தொழில்நுட்ப உதவிகளை கொண்டு எளிமையாக இசையமைத்துவிடுவதால் தன்னால் அந்த பாடலுக்கே உரித்தான உணர்வுகளை பெற முடிவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.


 



தன்னை  போன்று பாடகராக இருக்கும் அனைவரும் தினமும் மறவாமல் ”ஸ்வர சாதனா” செய்ய வேண்டும் என்றும், தான் பிஸியாக பாடிக்கொண்டிருந்ததால் தினமும் அதை செய்ய தவறிவிட்டேன் என்றும் ஒரு பாடகியாக அதை நினைத்து பலமுறை வருந்தியதாகவும்  தெரிவித்தார். மேலும் மற்றவர்கள் குரல்களை வைத்து பாடுவதை நிறுத்திவிட்டு கலைஞர்கள் அவர்களின் சொந்த குரலை கண்டறிய வேண்டும், ராகங்களை படிக்க வேண்டும், கர்நாடக இசைகளை கற்றறிய வேண்டும் என வருங்கால பாடகர்களுக்கு சில டிப்ஸ்களையும் பகிர்ந்துள்ளார்.