திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 






இந்தநிலையில், மறைந்த பிரதாப் போத்தன் இறுதியாக எழுதிய ஃபேஸ்புக் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், வாழ்க்கையின் பொருள் என்ன? என ஒருவர் கேட்ட கேள்விக்கு, “எனக்கு வாழ்க்கையின் பொருள் தெரிந்தால், நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போதைக்கு, பிழைத்துக்கிடப்பதே வாழ்வின் பொருள் என நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 




பிரதாப் போத்தன் இறந்தது எப்படி?


பிரதாப் போத்தன் கீழபாக்கம் கிளேவ் சாந்த் அப்பார்மெண்டில் கடந்த 15 வருடமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று 15.07.2022-ம் தேதி காலை சுமார் 08.00 மணியளவில் சமையலர் மேத்யூ (23 வருடங்களாக வேலை செய்கிறார்) என்பவர் காபி கொடுக்க இவரது படுக்கை அறைக்கு சென்றபோது பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படுத்த நிலையில் இருந்துள்ளார்.


உடனே பிரதாப் போத்தனின் கார் ஓட்டுநர் சுரேஷ் (20 வருடங்களாக வேலை செய்கிறார்) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்பு இருவரும் சேர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் பிரதாப் போத்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து சென்றுள்ளனர்.


நெஞ்சுவலி காரணமாக பிரதாப் போத்தன் இறந்திருக்கலாம் என அப்பலோ மருத்துவமனையின் அவசர ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டில் தனது மனைவி அமலா மற்றும் மகள் கேயாவுடன் பிரதாப் வாழ்ந்து வந்திருக்கிறார்.


இவரது வீட்டிலேயே இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது, மேலும் நாளை 16.07.2022-ம் தேதி வேலங்காடு ஈடுகட்டிற்கு நல்லடக்கம் செய்ய உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண