பாடகி சித்ரா பேசும் போது, “ அவங்க காலத்துல அவர் பாடிய பாடல்கள் எல்லாமே மியூசிக்கலி ரொம்ப ரிச்சானா பாடல்கள். இப்போதெல்லாம் இசைப்போட்டிகள் நிறைய வருது. அதுல கலந்துக்கிற பாடகர்களோட திறமை முழுவதுமா வெளிப்படணும் அப்படின்னா அவர் பாடிய பாடல்களை பாடி கத்துக்கணும்.
அப்போதே அவங்க அவ்வளவு பெர்பெக்ஷனாக பாடியிருக்காங்க. அதெல்லாம் கத்துக்கணும். அவங்க இல்ல அப்படிங்கிறத நம்பவே முடியல. இந்தியான்னு சொன்ன உடனே வரக்கூடிய முகங்கள்ல லதா ஜி யோட முகமும் ஒன்று. அவங்களோட குரல் இந்தியாவை பிரதிபலிக்கிற குரல். அவங்க 75 ஆவது பிறந்தநாள் அன்று அவர் முன்னாடி பாடினேன்.
அதே போல அவங்களோட 80 வது பிறந்தநாள் அன்று, அவங்க பாடல்கள மட்டும் எடுத்து பாடி அவங்களுக்கு அனுப்பி வைச்சேன். அதை கேட்டுட்டு அவங்க எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. அது எனக்கு கிடைச்ச மிகப் பெரிய விருதா நினைக்கிறேன். என்னோட குழந்தை இறந்த சமயத்துல நான் எங்கேயும் போகாம வீட்டிலேயே இருந்தேன். அப்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு என்ன கூப்பிட்டாங்க. அந்த அழைப்ப நான் மறுத்துட்டேன்.
அப்ப லதா ஜி அம்மா எனக்கு கால் பண்ணி அப்படியெல்லாம் இருக்கக் கூடாது.. நானும் வருவேன்.. நீயும் வரணும் அப்படினு சொன்னாங்க.. அதுக்கப்புறமா நான் அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். நான் சோகமா இருக்கும் போதெல்லா லதா பாடின மீரா பாடலை கேட்பேன். அதை கேட்கும் போது நான் வேற உலகத்துக்கே சென்று விடுவேன்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்