சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஆடிய குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இது மட்டுமன்றி இந்தப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும் பாடல்களும் மிகப் பிரபலம் அடைந்த நிலையில், பலரும் அந்த பாடலில் நடனமாடுவது போல நடனமாடியும், வசனங்களையும் பேசியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.






குறிப்பாக, படத்தில் இடம் பெற்ற ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜூன் ஸ்டெப் போடுவது போலவே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் ஸ்டெப் போட்டு வீடியோக்களை வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது ஒரு சிறு குழந்தை ஒன்று ஸ்ரீவள்ளி பாடலின் பிரபலமான ஸ்டெப்பை ஆடி வைரலாகியுள்ளது. அல்லு அர்ஜூன்  போல குழந்தை தனக்கே உரித்தான க்யூட்டுடன் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.