இன்ஸ்டாகிராம் மக்களுக்கு, எமி ஜான்சன் ஒரு அட்வைஸை கொடுத்திருக்கிறார். "நினைப்பதெல்லாம் கிடைத்துவிட்டால் அது சந்தோஷமில்லை. உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களின் கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் போய்விடாமல், அதற்கு ஏற்ப எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்” என்று ஒரு வாக்கியத்தை போஸ்ட் செய்திருக்கிறார். சந்தோஷம் என்பது எளிமையானது. வேறு எதையும் யோசித்து மனதைக் குழப்பிக்கொள்ளவேண்டாம் என்னும் மெசேஜை கொடுத்திருக்கிறார்

Continues below advertisement






தமிழ் சினிமா உலகில் புதிய நட்சத்திரங்களாகப் பலபேர் அறிமுகமானாலும் வெகுசிலர் மட்டுமே ‘இவர்கள் திரையில் நீண்ட நாட்கள் ஜொலிப்பார்கள்’ என்று கணிக்கக் கூடிய வகையில் தங்களது ஸ்க்ரீன் பிரசென்ஸைக் கொடுப்பார்கள். அந்த வரிசையில் உள்ளார் நடிகர் எமி ஜாக்சன். 2010ம் ஆண்டு இயக்குநர் விஜயின் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக இந்தியத் திரைப்பட உலகத்தில் நுழைந்தார் எமி ஜாக்சன். தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வந்த எமி எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0ல் அக்‌ஷய் குமார், ரஜினி காந்த் ஆகியோருடன் நடித்தார். அந்தப் படத்தில் ரோபோவாக நடித்த எமி, கடைசியாக நடித்த படமும் அதுதான்.அதன் பிறகு ஜார்ஜ் பனையீட்டூ என்கிற தொழிலதிபருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.






 


ஏமி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் ஆண்டனி ஜாக்சன் பனையீட்டூ எனப் பெயரிட்டனர். இதற்கிடையே ஏமி ஜார்ஜ் உடனான தனது இன்ஸ்டாகிராம் படங்கள் அத்தனையையும் நீக்கினார். ஏமியும் ஜார்ஜும் பிரிந்ததாக செய்திகள் வெளியானது.இதையடுத்து தனது மகனுடனான படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் எமி.மேலும் கான்ஸ் உள்ளிட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். குழந்தை பிறந்த பிறகு ஃபிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார், என்றாலும் புதிதாகத் தற்போது படங்கள் எதிலும் நடிப்பதாக அறிவிக்கவில்லை. தொடர்ச்சியாக மாடலிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.