நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 


இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில்,கிருஷ்ணா நதி - பெண்ணாறு- காவேரி நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க:வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!


மேலும், ஐந்து நதி இணைப்புகளுக்கான வரைவுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இணைக்கப்பட இருக்கும் நதிகளில் விவரம் பின்வருமாறு :தாமன் கங்கா-பிஞ்சல்; பர் தபி-நர்மதா; கோதாவரி-கிருஷ்ணா; கிருஷ்ணா-பெண்ணாறு மற்றும் பெண்ணாறு-காவேரி 


 






இந்த திட்டத்தின்கீழ், பயனடையும் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன், அவற்றை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். அதேபோல், கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்தையும் அறிவித்த நிதியமைச்சர், 44,605 ​​கோடி செலவில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த திட்டத்தால் 900,000 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.


 


மேலும் படிக்க:  Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண