இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், பிரபலமானவருமானவரும் லலித் மோடி. ஐ.பி.எல். தலைவராக பொறுப்பு வகித்த இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


இந்த புகைப்படங்களை பகிர்ந்து “நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.





டேட்டிங்தான் செய்கிறோம். அதுவும் ஒருநாள் நிச்சயம் நடக்கும்.” என்று பதிவிட்டுள்ளார். லலித் மோடியின் இந்த டுவிட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


1963ம் ஆண்டு பிறந்த லலித்மோடி இந்தியாவில் மிகவும் பிரபலமான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் முதல் சேர்மன் ஆவார். ஐ.பி.எல். தொடர்களின் சேர்மனாக 2010ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். பி.சி.சி.ஐ.யிலும் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.


ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கங்களில் செல்வாக்கு மிகுந்த நபராக திகழ்ந்த லலித்மோடிக்கு 1991ம் ஆண்டு மினல் சாக்ராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ருசிர் என்ற மகனும், ஆலியா என்ற மகளும் உள்ளனர். மினல் சாக்ராணிக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த கரீமா சாக்ராணி என்ற மகளுக்கும் லலித்மோடியே தந்தை ஸ்தானத்தில் பாதுகாவலராக இருந்தார். மினல் சாக்ராணி கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார்.






தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 46 வயதாகிறது. இவர் ஏற்கனே ஒருவருடன் தொடர்பில் இருந்து அந்த உறவு கடந்தாண்டு முறிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது லலித் மோடியுடன் டேட்டிங் உறவில் உள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண