சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் லால் சலாம்(Lal Salaam). நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். லால் சலாம் கிரிகெட்டை மையப் படுத்தியக் கதையாக உருவாகி வருகிறது.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதால் கவனம் பெற்ற இந்தப் படம், முக்கியான கதாபாத்திரத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதில் இருந்து மோஸ்ட் எக்ஸ்படட் படமாகிவிட்டது.
அதனாலேயே லால் சலாம் அப்டேட் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்.


இந்நிலையில் ரசிகர்களுக்கு தீணிபோடும் வகையில் ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உள்ளது. அதன் கீழே ரஜினிகாந்த், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நபருடன் இணைந்து வேலை செய்தததை எனது கவுரவமாகக் கருதுகிறேன். அவர் வேறு யாருமில்லை. அனைவராலும் மதிக்கப்படும் அற்புதமான மனிதர் கபில்தேவ் ஜி தான். கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமையைப் பெற்றவர் என்று பதிவிட்டுள்ளார்.


இந்தப் போட்டோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் மீண்டும் 'ஓ சாத்தி சால்' எனும் இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாவதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் “லால் சலாம்” படத்தை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும்,  ராமு தங்கராஜ்  கலை இயக்குனராகவும், பிரவீன் பாஸ்கர் எடிட்டராகவும் லால் சலாம் படத்தில் பணியாற்றுகின்றனர்.


’தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் வழியாக ஐஷ்வர்யா இயக்குனராக அறிமுகமானார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் ஐஷ்வர்யாவின் மேல் பெரும் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது.


அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. ஆனால் இந்தப் படம் எதிர்பார்ர்த்த வெற்றியடையவில்லை. ஆனால் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிகர் தனுஷ் நடித்துச் சென்ற காட்சி பயங்கர வைரலானது.


புதுபேட்டை படத்தின் கொக்கிக் குமாரு கெரக்டராக தனுஷ் இந்தப் படத்தில் தோன்றினார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஷ்வர்யா இயக்கும் படம் லால் சலாம்.இந்தப் படத்தில் ரஜினி நடிக்கு காட்சி நிச்சயம் கடந்த முறைப் போலவே பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


சூப்பர்ஸ்டார் ரஜினி  நடித்துள்ள ஜெயிலர் படம் தற்போது இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளது.டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமன்னா, மோகன்லால்,ஜாக்கி ஷ்ராஃப்.யோகி பாபு,ரம்யா கிருஷ்ணன்,வினாயக் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.