தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த பிரபலமான நடிகையும் நடிகர் மோகன் பாபுவின் மகளுமானவர் நடிகை லட்சுமி மஞ்சு. தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
ஆங்கிலத்தில் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். 'லாஸ் வேகாஸ்,' 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ்,' 'லேட் நைட்ஸ் வித் மை லவ்வர்,' மற்றும் 'மிஸ்டரி ஈஆர்' போன்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்றாலும் அமெரிக்காவில் படித்து செட்டிலானவர்.
தமிழில் அறிமுகம்:
2011ம் ஆண்டு 'அனகனகா ஓ தீருடு ' திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான லட்சுமி மஞ்சு பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் செலீனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜோதிகா நடிப்பில் வெளியான 'காற்றின் மொழி' படத்தில் மரியம் என்ற கதாபாத்திரமாக மிகவும் ஸ்டைலிஷ் போல்ட் கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
SIIMA 2023 :
11வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழா ( SIIMA 2023) விழா துபாயில் உள்ள துபாய் உலக வர்த்தக மையத்தில் கடந்த செப்டம்பர் 15ம் மற்றும் 16ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய திரைப்படங்களில் சிறந்த படம், நடிகர் நடிகையர், இசையமைப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இந்த விழாவில் தென்னிந்திய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். கோலிவுட்டை சேர்ந்த அதிதி ஷங்கர், மிருணாள் தாகூர், அதுல்யா ரவி, ஸ்ரீ லீலா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லட்சுமி மஞ்சு கொடுத்த ஷாக் :
இந்த ஆண்டு SIIMA 2023 விருதுகள் விழாவில் நடிகை லட்சுமி மஞ்சு கலந்து கொண்டார். க்ரெயிஷ் சில்வர் புடவையில் நேர்த்தியாகவும் ஸ்டைலாகவும் கலந்து கொண்டு பார்வையளர்களின் கவனத்தை ஈர்த்தார் லட்சுமி மஞ்சு. அந்த சமயத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையில் அதைப் பொருட்படுத்தாமல் கேமரா முன்னர் ஒருவர் நடந்து சென்றதால் ஆத்திரமடைந்த லட்சுமி மஞ்சு அவரின் முதுகில் ஒரு தட்டு தட்டினார். அவரின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அடுத்ததாக கேமரா முன்னர் நடந்து செல்ல வந்த நபரை திட்டி "கேமராவுக்கு பின்னால் போ, பேசு" என கூறியது கேமராவில் பதிவாகியது. லட்சுமி மஞ்சுவின் இந்த செயலை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்கள். லட்சுமி மஞ்சுவின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.