Nayanthara quits acting: படத்தில் இனி நடிக்க போவதில்லை... நயன்தாரா பற்றிய வதந்தி உண்மையா? பொய்யா? 


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசம் ஈர்த்த ஒரே நடிகை நயன்தாரா. மிக குறுகிய காலத்திலேயே பல ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களை வசியம் செய்தவர் நயன்தாரா. 


லேடி சூப்பர் ஸ்டார்:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம், சிவகார்த்திகேயன் என கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை நயன்தாராவை சேரும். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமா உலகிலும் ரசிகர்களை கவர்ந்து அங்கும் ஒரு முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் பெற்றவர் நயன்தாரா.  நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து தனது சிறப்பான நடிப்பால் உலகளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றார். மிக சமீப காலமாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களாக நடித்து அதில் வெற்றியும் பெற்றார் நயன்தாரா. 



 


காதல் முதல் கல்யாணம் வரை:


பல காலமாக காதலர்களாக இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் சமீபத்தில் தான் நடைபெற்றது. இருவரும் அவரவரின்  பணிகளில் மிகவும் பிஸியாக இருந்து வந்தாலும் ஹனி மூனுக்காக ஐரோப்பா நாடுகளுக்கு சென்று பல ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது ரசிகர்களை குதூகலமாக்கி வந்தனர்.   


நயன்தாரா கொடுத்த ஷாக் நியூஸ்:


இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு புதிய அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது நடித்து வரும் படங்களை தவிர நயன்தாரா வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார் என தகவல்கள் பரவின. அவர் இனி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட  போவதாக முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது அவரின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 






கண்டிஷன் போட்ட குடும்பத்தினர்:


நயன் தாரா குடும்பத்தினர் அவரது திருமண தாலியை அகற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தற்போது அவர் நடிக்கும் படங்களில் பாரம்பரியமாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து படங்களிலும் தனிப்பட்ட ஆபரணங்களை அகற்றாமல் நடிக்க இயலாது என்பதால் இந்த முடிவை நயன்தாரா எடுத்துள்ளதாக வதந்தி பரவியது. அதனால் இனிமேல் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தை நயன்தாரா எடுத்து நடத்துவார் என்றும் எதிர்காலத்தில் படங்கள் தயாராக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இது வெறும் வதந்தி மட்டுமே என ரசிகர்களால் திடமாக நம்பப்படுகிறது


கைவசம் உள்ள படங்கள் :


தென்னிந்திய சினிமாவின் அதிகமான சம்பளம் வாங்கும் ஒரு நடிகையான நயன் தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக "ஜவான்", மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் ஜோடியாக 'கோல்ட்', சிரஞ்சீவி ஜோடியாக 'காட்பாதர்', அஷ்வின் சரவணனின் 'கனெக்ட்' மற்றும் ஜெயம் ரவியின் ஜோடியாக 'இறைவன்' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.   


புதுவரலாறே, புறநானூறே.. கீப் ராக்கிங்..


ALSO READ | Cobra Movie First Review: வெளியான கோப்ரா ரிவியூ! விக்ரமுக்கு இது மைல்கல்! புகழ்ந்துதள்ளிய முக்கிய நபர்!