உலகின் புகழ்பெற்ற மாடல்களில் ஒருவர் கைலி ஜென்னர். தொழிலதிபர், சமூக ஊடகங்களில் எப்போதும் பரபரப்பாக இருப்பவர், சமூக செயற்பாட்டாளர் என்று பன்முகம் கொண்ட இவர் அடிப்படையில் ஒரு மாடல் ஆவார். இவருக்கு என்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  


சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கைலி ஜென்னருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 275 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில், இவர் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடல் முழுவதும் ரத்தக்கறையுடன் உடலில் எந்த துணியும் இல்லாமல் நிர்வாணமாக இவர் போஸ் அளித்துள்ளார். இந்த போஸ் இவரது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




வெள்ளை நிற பின்னணியில், தரையிலும், உடலிலும் முழுவதும் ரத்தக்கறையுடன் கைலி ஜென்னருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், கைலி ஜென்னர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதற்கான அறிவிப்பை அவரே கடந்த மாதம்  வெளியிட்டிருந்தார். ஒரு கர்ப்பிணி இவ்வாறு ரத்தக்கறையுடன் போஸ் அளிப்பது நல்லதல்ல என்றும், உடல்நலத்தில் அக்கறை காட்டாமல் பேறுகாலத்தில் இவ்வாறு மாடலிங்களில் ஈடுபடுவது குழந்தையின் நலனுக்கு ஆபத்தானது என்றும் பலரும் இந்த புகைப்படத்தின் கீழ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


கைலி ஜென்னர் பதிவிட்டுள்ள இந்த படம் தற்போது வரை கோடிக்கணக்கான பார்வையாளர்களையும் கடந்து பார்க்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் வன்முறையைத் தூண்டும் வகையில் இவ்வாறு ரத்தக்கறைகளை பட்டவர்த்தனமாக காட்டும் புகைப்படத்தை பதிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். கைலி ஜென்னர் உலகப்புகழ் பெற்ற மாடலான கிம் காதர்ஷியனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




கைலி ஜென்னருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் அதே சூழலில், பலரும் அவருக்கு ஆதரவாக வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அவர் கைலி ஜென்னரின் இந்த புகைப்படத்திற்கு “நான் அழுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கிகி ஹாதித் என்ற மற்றொரு பிரபலம் “ உன்னால் எனது இதயமே வெடித்துவிட்டது.  வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


24 வயதான கைலி ஜென்னர் கடந்த 2014ம் ஆண்டு டைகா என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றுவிட்டனர். கைலி ஜென்னர் பின்னர் 2017ம் ஆண்டு ட்ராவிஸ் ஸ்காட் என்பவரை திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் 2019ம் ஆண்டு வரை இணைந்திருந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டு பிரிந்து இருந்தனர். பின்னர், நடப்பாண்டில்தான் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழத் தொடங்கினர். கைலி ஜென்னருக்கு 2018ம் ஆண்டு ஸ்டோர்மி என்ற குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண