உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17-ந் தேதி தொடங்குகிறது. ஐ.பி.எல். தொடரில் தற்போது பங்கேற்று ஆடி வரும் இந்திய அணியினர் ஐக்கிய அரபு அமீரகத்திலே தங்கியுள்ளனர். இந்திய அணி வரும் 24-ந் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது.


இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஆலோசகராக மூன்று உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.




இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா  ஏ.என்.ஐ.க்கு அளித்துள்ள பேட்டியில், உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வழிகாட்டியாக செயல்படுவதற்கு எந்த ஊதியமும் பெறவில்லை.” என்று கூறினார். கங்குலி தலைமையின்போது இந்திய அணியில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட்டிற்காக 2007ம் ஆண்டு டி20 உலககோப்பை, 2011ம் ஆண்டு உலககோப்பை மற்றும் டி20 உலககோப்பையை கைப்பற்றியுள்ளார். சர்வதே கிரிக்கெட் போட்டியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்குமான உலககோப்பையையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது.


கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. இருப்பினும் சென்னை அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதாக அறிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளில் தோனி ஆடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் தோனியின் தலைமையில் சென்னை அணி 9வது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டி வரும் வெள்ளிக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.




40 வயதான தோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 876 ரன்களும், 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 773 ரன்களும், 98 டி20க்களில் ஆடி 1,617 போட்டிகளிலும், 219 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 746 ரன்களும் குவித்துள்ளார். தோனியின் தலைமையின் கீழ் ஆடிய விராட்கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, ரிஷப்பண்ட் உள்பட ஏராளமான வீரர்கள் உலககோப்பை தொடரில் இடம்பெற்றுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண