நடிகை குஷ்பு, தான் 20 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், முதல் புகைப்படத்தில் இருந்து தற்போது உள்ள புகைப்பட உடல் வருவதற்கு 20 கிலோ குறைத்து இருக்கிறேன், தற்போது நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள், ஆரோக்கியமே என் செல்வம். என் உடம்பு சரியில்லையா என்று கேட்ட அக்கறைக்கு நன்றி. இதற்கு முன்பு நான் அவ்வளவு ஃபிட்டாக இருந்ததில்லை. என்னைப்போல் உங்களில் 10 பேரையாவது உடல் எடையை குறைத்து, உடல் தகுதி பெற தூண்டினால், நான் அப்பொழுதுதான் வெற்றி பெற்றுள்ளேன் என்று உணர்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்