Director Sri Ganesh Marriage : நான் இயக்குனர் மிஷ்கினின் மிக பெரிய ரசிகன் - இயக்குனர் ஸ்ரீ கணேஷ் 


தமிழ் சினிமாவில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்து பின்னர் இயக்குனர்களாக முன்னேறி வெற்றி பெற்ற பல இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் "குருதி ஆட்டம்". இயக்குனர் ஸ்ரீ கணேஷ் திருமணம் இன்று பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


ஸ்ரீ கணேஷ் திரை பயணம் :


இயக்குனர் மிஷ்கினின் மிக பெரிய ரசிகரான ஸ்ரீ கணேஷ் அவரின் உதவி இயக்குனராக பணிபுரிந்ததன் மூலம் சினிமாவின் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கிய "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படம் விமர்சன ரீதியாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். அப்படத்தில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



 


இயக்குனர் ஸ்ரீகணேஷ் திருமணம்:


"8 தோட்டாக்கள்" மற்றும் "குருதி ஆட்டம்" திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் திருமணம் இன்று சென்னையில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயிலில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குனர் ஸ்ரீ கணேஷின் நீண்ட நாள் தோழியான சுஹாசினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இயக்குனராக முதல் பிரவேசம் :


'ஸ்ட்ரே டாக்' என்ற ஜப்பானிய திரைப்படத்தை மையமாக வைத்து ஸ்ரீ கணேஷ் இயக்கிய முதல் திரைப்படம் "8 தோட்டாக்கள்". 2017ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு வித்தியாசமான திரைக்கதை கொண்டு இருந்ததால் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீ மேக் செய்யப்பட்டது. 
 
ஸ்ரீ கணேஷின் அடுத்த படம் :


"8 தோட்டாக்கள்" படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கிய திரைப்படம் "குருதி ஆட்டம்". 2017ம் ஆண்டே இப்படம் குறித்து அறிவிப்பு வெளிவந்தாலும் கொரோனா பரவல் காரணத்தாலும் சில சட்ட ரீதியான பிரச்சனைகளின் காரணமாகவும் படத்தின் வெளியீடு சில காலங்கள் தமதமாகி சென்ற மாதம் தான் வெளியானது. 


 






 


கலவையான விமர்சனம் : 


"குருதி ஆட்டம்" திரைப்படத்தில் அதர்வா முரளி மற்றும் பிரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். "8 தோட்டாக்கள்" திரைப்படத்தின் இசையமைப்பாளராக இருந்த யுவன் ஷங்கர் ராஜா தான் குருதி ஆட்டம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு "8 தோட்டாக்கள்" திரைப்படம் போல நேர்மறையான விமர்சனங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கலவையான விமர்சனத்தை பெற்றது. எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.