பாகுபலி திரைப்படம் மூலம் ஒரு பான் இந்திய நடிகராக மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதனை தொடர்ந்து அவர் நடித்த சாஹோ, ராதே ஷியாம் என அடுத்த இரண்டு படங்களும் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்களாக வெளியாகின. இருப்பினும் பாகுபலியின் வெற்றியை ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்தன.
கிராபிக்ஸில் உருவாகும் ஆதிபுருஷ் :
தற்போது நடிகர் பிரபாஸ் பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் இணைந்து நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயண கதையை மையமாக கொண்ட இப்படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாகி வருகிறது. அந்த வகையில் பிரபாஸ் - கிருத்தி சனோன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாகவும் வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வந்தன.
வருண் தவான் செய்த வேலை :
பிரபாஸ் மற்றும் க்ரிதி சனோன் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியான நாள் முதல் பரவி வருகிறது. இருவரும் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என மறுத்தாலும் இந்த வதந்திகள் நின்றபாடு இல்லை. ஒரு நிகழ்ச்சியில் வருண் தவான் கிண்டல் செய்கையில் க்ரிதி சனோன் வெட்கப்பட்டதே இந்த வதந்திகளுக்கு எரிபொருளாக மாறின. இருவரும் அவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் விரைவில் இருவரும் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் செய்யப் போவதாக திரைப்பட விமர்சகர் ஒருவர் ட்வீட் செய்தது இணையத்தில் புயலை கிளப்பியது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிருத்தி சனோன் விளக்கமளித்துள்ளார். பிரபாஸுடனான எனது உறவு அடிப்படையற்றது. வருண் தவான் கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொண்டார். அவரின் வேடிக்கையான பேச்சுதான் இந்த டேட்டிங் வதந்திகளுக்கு வழிவகுத்தது. எங்கள் இருவருக்கும் இடையில் பியாரும் (காதல்) இல்லை, PRயும் இல்லை... நாங்கள் இருவரும் நண்பர்கள். இணையத்தில் என்னுடைய திருமண தேதியை அறிவிக்கும் முன்னர் அதை உடைக்க விரும்பினேன். இந்த வதந்திகள் ஆதாரமற்றவை என தெரிவித்தார்.
பிரபாஸ் கொடுத்த பதில் :
அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே 2 நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா, பிரபாஸிடம் கிருத்தி சனோனுடன் டேட்டிங் வதந்திகள் குறித்து 'ராமர் ஏன் சீதாவை காதலித்தார்?' என கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்த பிரபாஸ் மிகவும் நளினமாக "இது பழைய செய்தி. மேடம் ஏற்கனவே க்ளியர் செய்துவிட்டார். அப்படி எதுவும் இல்லை என்று 'மேடம்' தரப்பிலும் இருந்தும் தெளிவான பதில் வந்துவிட்டது என்றார்.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. பிரபாஸ் மற்றும் க்ரிதி சனோன் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஓம் ரவுத் இயக்கியுள்ள இப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.