அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நாசர், அஷோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ் ரவிக்குமார், ரித்விகா, அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் மிகவும் பிரபலம். அதே பெயரில் பீம் சிங் இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு திரைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே பெயரில் திரைப்படம் உருவாகியிருப்பதால் ரசிகர்களிடையே இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படமானது ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ஜெயகாந்தன் எழுதிய நாவலுக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைப்பு மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வாசிக்க: Sila Nerangalil Sila Manithargal Review: ஒரு சின்ன வாழ்க்கை பயணம்.. நல்லா இருந்ததா? இல்லையா? - சில நேரங்களில் சில மனிதர்கள் ரிவ்யூ...
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அப்சரா திரையரங்கின் உரிமையாளர் தற்போது வெளியாகியிருக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
படம் குறித்து அவர் தனது திரையரங்குக்கு வெளியில் இருக்கும் பலகை ஒன்றில், “சில நேரங்களில் சில மனிதர்கள். இதுபோன்ற நல்ல திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும். நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் இத்திரைப்படத்தில் கதாபாத்திரமாக நடித்து வாழ்ந்துள்ளார்கள்.
குத்து பாட்டு இல்லை, சாதி, மத சண்டை இல்லை. நாயகன் ஒருவரே 50 பேரை அடிப்பது இல்லை. இரட்டை அர்த்த வசனம் இல்லை. குண்டு வெடிப்பது, கார்சேசிங், கலவரம் இல்லை. மொத்தத்தில் சினிமாத்தனம் இல்லாத நல்ல சினிமா காணத்தவறாதீர்கள்” என எழுதியுள்ளார். தற்போது அப்சரா திரையரங்கின் உரிமையாளருடைய பாராட்டை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்