தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவி நடத்தும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜுனியர் என அந்த டிவியில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்கள் பெரும் ஹிட் அடித்தவை.
அந்தவகையில் விஜய் டிவியில் சூப்பர் டாடி என்ற ரியாலிட்டி ஷோ நடக்கிறது. இதில், பல சின்னத்திரை பிரபலங்களும் தங்கள் குழந்தைகளுடன் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
அதன்படி, வித்தியாசமான விளையாட்டு போட்டிகளுடன் அந்த நிகழ்ச்சியானது கலகலப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்களான வெங்கட், ராமர், மதுரை முத்து, வேல்முருகன் உட்பட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிவருகின்றனர். ரசிகர்களும் அதனை ரசித்து பார்த்துவருகின்றனர்.
மேலும் வாசிக்க: BJP-Aiadmk Alliance: தேசிய அளவில் கூட்டணியில் இருக்கிறோம்; ஆனால் தனித்து போட்டி: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
இந்நிலையில் நடிகர் வெங்கட் மற்றும் அவரது மகள் தேஜூ சூப்பர் டாடி நிகழ்ச்சியிலிருந்து விலகியிருக்கின்றனர் என கூறப்படுகிறது. வெங்கட் மற்றும் அவரது மகள் தேஜூவுக்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சூப்பர் டாடி நிகழ்ச்சி குறித்து வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுவந்தார். இதனால் அவர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருப்பார்கள் என பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்துவருகிறார். எனவே ஒரே சமயத்தில் சூப்பர் டாடி நிகழ்ச்சிக்கும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கால்ஷுட் ஒதுக்கமுடியாத நிலை வெங்கட்டுக்கு ஏற்பட்டதாகவும், அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்காக சூப்பர் டாடி நிகழ்ச்சியை விட்டுக்கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெங்கட் - தேஜூவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்