செம்பி படத்தின் ஆடியோ இன்று வெளியாகவுள்ளதாக அஷ்வின் தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். கும்கி, மைனா, கிங், தொடரி என பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த டைரக்டர் பிரபு சாலமன், செம்பி எனும் படத்தை இயக்கிவருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழின் உச்சியை தொட்டாலும், பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாக சிதறினார் அஸ்வின். இதற்கிடையில் ஆல்பம் பாடல்களில் கலர் கலரான செட்டில் டான்ஸ் ஆடிவந்தார். இப்போதுதான் அவரின் வீட்டு கதவை ஒரு சில பட வாய்ப்புகள் தட்டி வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் நகைச்சுவை நடிகையான கோவை சரளாவுடன் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் இணைந்துள்ளார்.
பெரும்பாலும், கோவை சரளாவை வடிவேலுவின் ஜோடியாக காமெடி படங்களில் பார்த்திருப்போம். மிஞ்சிப்போனால் கைவிட்டு எண்ணும் காட்சிகளில் எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பின், காஞ்சனா படத்தில் ராகவனின் அம்மாவாக பார்த்திருப்போம். ஆனால், கோவை சரளா இப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸ் ரோலில் நடித்துவருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் செம்பி படம் ரிலீஸாகும் என்று குறிப்பிடபட்டுள்ளது. கொடைக்கானல் முதல் திண்டுக்கல் வரை செல்லும் பஸ் பயணத்தில் நடக்கும் கதையே செம்பி திரைப்படம். வயதான தோற்றத்தில் நடிக்கும் கோவை சரளாவுடன் தம்பி ராமையா, குழந்தை நட்சத்திரம் நிலா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
முன்பாக இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவன் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க : கோலிவுட் இயக்குநருக்கு பாலிவுட்டில் எகிறும் டிமாண்ட்... அட்லீயின் அடுத்த முடிவு என்ன?