தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. குறைந்த காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்று முன்னணி இயக்குனர்களுக்கு கடும் போட்டியாளராக இருந்து வரும் இயக்குனர் அட்லீயின் பெருமை இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளது. 


 



 


அட்லீ - விஜய் கூட்டணி ஒரு மாஸ் கூட்டணி :


"ராஜா ராணி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமான அட்லீ இதுவரையில் நான்கு பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அட்லீ - நடிகர் விஜய் கூட்டணி இதுவரையில் ஒரு வெற்றி கூட்டணியாகவே அமைந்துள்ளது. தெறி, மெர்சல், பிகில் படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றி கூட்டணி மற்றுமொரு திரைப்படத்தின் மூலம் இணையுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


 






ஜவான் திரைப்படத்தில் விஜய் என்ட்ரி உண்டா ?


கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் கிங்  ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி மற்றும் பலர் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் "ஜவான்" படப்பிடிப்பில் மிகவும்  மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். ஷாருக்கான் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார் எனும் சலசலப்பு சினிமா வட்டாரத்தில் நிலவுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இதற்கு மத்தியில் மேலும் ஒரு தகவலாக அட்லீ - விஜய் கூட்டணி மீண்டும் 'தளபதி 68 ' திரைப்படம் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இவர்களின் கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படமாகும். 


 






 


சல்மான் கான் - அட்லீ கூட்டணி விரைவில் :


மேலும் பாலிவுட்டின் அதிகமான வசூல் வேட்டையை அள்ளும் சூப்பர் ஸ்டார் நடிகரான சல்மான் கான், இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணிபுரிய விருப்பப்படுவதாக பாலிவுட் ஊடங்கள் செய்தி வெளியிடுகிறன்றனர். இது உண்மையெனில் தளபதி 68 படத்தை தெடர்ந்து நடிகர் சல்மான் கான் - அட்லீ இணையும் வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய கோலிவுட் இயக்குனரின் முதல் பாலிவுட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவருக்கு பாலிவுட்டில் டிமாண்ட் அதிகமாகிவிட்டது.