77வது சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 


தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் சுதந்திர தின வாழ்த்துகளை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இமயம் முதல் குமரி வரை நம்மை காக்கும் ராணுவ வீரர்களை தலை வணங்குவோம் என கூறியுள்ளார்.






சுதந்திர தினத்தின் நினைவு கூறும் விதமாக நடிகரும், அரசியல் தலைவருமான கமல்ஹாசன் பிரபல நாளிதழுக்கு தான் எழுதி இருக்கும் கட்டுரையை குறிப்பிட்டு டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலமும், தனது நம்பிக்கையும் தான் எழுதிய அந்த கட்டுரையில் இருப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 






நடிகர் சித்தார்த் கார்ட்டூன் புகைப்படத்தை குறிப்பிட்டு சுதந்திர  தின வாழ்த்து கூறியுள்ளார். 






நடிகையாக இருந்து ஆந்திரா எம்பியாக இருக்கும் ரோஜா டிவிட்டர் பதிவு மூலம் சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார். ஏழை மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கான சமத்துவம், பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறுவோம் என கூறியுள்ளார். 






நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவு மூலம் சுதந்திர வாழ்த்து கூறியுள்ளார். மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை நினைவு கூர்வோம் என கூறியுள்ளார். 






நடிகர் பிரபுதேவா மூவர்ண கொடியை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார். 






லெஜெண்ட் சரவணன் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 






குக் வித் கோமாளி புகழ் இந்திய சுதந்திரம் இருளில் கிடைத்த புது விடியல் என குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார். 






இந்தி நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டகிராம் பதிவில் ‘ சாரே ஜஹான் சே அச்சா’ பாடலின் வீடியோவை பகிர்ந்துள்ளார். நடிகை கரீனா கபூர் மூர்வண கொடியை பகிர்ந்தும், அனுஷ்கா சர்மா வந்தே மாதரம் பாடலின் மெல்லிசையை பதிவு செய்து வாழ்த்து கூறியுள்ளனர். நடிகர் அனுபம் கெட் இந்திய தேசிய கொடியின் வீடியோவை வெளியிட்டு சுதந்திர வாழ்த்து கூறியுள்ளார். அஜய் தேவன், ஆசாதி என்ற வார்த்தையை குறிப்பிட்டு சுதந்திர வாழ்த்து கூறியுள்ளார். 






நடிகர் அக்‌ஷய் குமார் குடியுரிமையை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார். பாலிவுட் ஸ்டாரான அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலரும் சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளனர்.