தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகை வித்யா பிரதீப். சைவம் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் அருண் விஜய் நடித்த தடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
இந்த நிலையில், இளம் நடிகையாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் படிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார் வித்யா பிரதீப். மருத்துவத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்த வித்யா பிரதீப் தற்போது ஸ்டெம்செல் பயாலஜியில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக, வித்யா பிரதீப் கூறியிருப்பதாவது, “ கடந்த பத்து வருடங்களாக நான் சங்கர நேத்ராயலா கண் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். நான் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறிவிட்டது. தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன்.
மேலும் படிக்க : Ajith Next Movie: அஜித்தின் 62 ஆவது படத்தின் இயக்குநர் இவர்தான்.. வெளியானது தகவல்.. மியூசிக் யாரு தெரியுமா..?
இதற்காக கடின உழைப்பைக் கொடுத்ததுடன் சில தியாகங்களையும் செய்துள்ளேன். இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் எனக்கான பொறுப்பு இன்னும் அதிகரித்து இருப்பதாக உணர்கிறேன். எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பணியாற்றுவேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகை வித்யா பிரதீப் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி தொடரில் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
கோலிவுட் நடிகை ஒருவர் ஸ்டெம்செல் பயாலஜியில் விஞ்ஞானியாக பட்டம் பெற்றிருப்பதற்கு தொடர்ந்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். வித்யா பிரதீப் ஒருமுறை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை நேரில் சந்தித்து ஸ்டெம்செல் பயாலஜி குறித்தும் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Karthi on Jyothika: “அண்ணிக்கு அடுத்த ஜெனரேஷன்தான் நான்” - ஜோதிகா குறித்து போட்டு உடைத்த கார்த்தி...!
மேலும் படிக்க : watch video | ”மேக்கப் போடவே டைம் சரியா இருக்குமே , எப்படி பொது பிரச்சனைக்கு போவாங்க” - தமிழச்சி தங்கபாண்டியன் பளீச் பதில்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்