காஃபி வித் கரன் :


பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரின்   ‘காஃபி வித் கரண்’(Koffee with Karan) மிகவும் பிரபலமானது. சினிமா பிரபலங்களின் பர்சனல் பக்கங்கள் தொடர்பான ரூமர்ஸ் , அந்தரங்க விஷயங்களை கரண் ஜோகர் வெளிப்படையாக கேட்டு விடுவதும் அதற்கு பிரபலங்கள் கொடுக்கும் பதில்களும்தான் ஷோவின் வெற்றிக்கு காரணம். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இதன் மூன்றாவது எபிசோடில் சிறப்பு விருந்தினராக அக்‌ஷய்குமார் மற்றும் சமந்தா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் சமந்தாவிடம்  நாக சைதன்யா உடனான விவாகரத்து குறித்து கரண் ஜோகர் வெளிப்படையாக கேட்டிருந்தார். அதற்கு சமந்தாவும் பதிலளித்த நிலையில் கரண் ஜோகரின் கேள்விக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டங்கள் எழுந்துள்ளன.







கரண் ஜோகர் கேள்வி :


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரண், நாக சைதன்யாவிற்கும், உங்களுக்கும் இடையே ஏதாவது கசப்பான உணர்வுகள் இருந்ததா..? என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த சமந்தா, “ அந்த கடினமான உணர்வுகள் எப்படியானது என்றால், இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்று இருந்தது...ஆம்.. இப்போது இணக்கமான சூழ்நிலை இல்லை.. ஆனால் எதிர்காலத்தில் சில சமயங்களில் இணக்கம் வரலாம்.” என்று பதில் கொடுத்திருந்தார்.







வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் :


இந்த நிலையில் கரண் ஜோகரின் கேள்வி முறையற்றதாக இருக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர் “ ஏன் கரண் எப்போதும் நடிகைகளின் விவாகரத்து அல்லது அவரது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து மட்டுமே கேள்வி கேட்கிறார் “ என்றார், மற்றொருவொருவர் “ 3 அத்தியாயங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன.அதற்குள்ளாகவே சர்ச்சை துவங்கிவிட்டது “ என்றார்.மேலும் சிலர் “ஒருவரின் வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் தாக்கி அதிக TRP பெற அவர் எதையும் செய்வார். என்ன ஒரு மோசமான நிகழ்ச்சி மற்றும் அருவருப்பான தொகுப்பாளர்.” என குறிப்பிட்டுள்ளனர்.