தொடர்ச்சியான மோசடிப் புகார்களை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகினார். இதை அடுத்து பிரிட்டனின் அடுத்த பிரதமராக மீதமுள்ள இரண்டு வேட்பாளர்களில் ஒருவராக முன்னாள் பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ரிஷி சுனக் நிறுத்தப்பட்டிருக்கிறார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று மக்கள் முன் பேசிய அவர் தன்னை போட்டியில் பின்தங்கியவர் என்று விவரித்துள்ளார்
பிரிட்டன் அமைச்சரவையில் இருந்து ரிஷி சுனக்கின் ராஜினாமா கிளர்ச்சியைத் தூண்ட உதவியது. இதை அடுத்துதான் தொடர்ச்சியான ஊழல்களுக்குப் பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக ஒப்புக்கொண்டார். இதை அடுத்து தற்போது ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் வருகின்ற கோடையில் அடுத்த பிரதமர் யார் என வாக்களிப்பார்கள், வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்.
சுனக் கன்சர்வேடிவ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடையே அனைத்து சுற்று வாக்குப்பதிவுகளிலும் முன்னிலை வகித்து போட்டிக்களத்தை இரண்டு வேட்பாளர்களாகக் குறைத்தார். ஆனால், , இறுதியில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில், ஆளும் கட்சியின் 200,000 உறுப்பினர்களில் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தான் இதுவரை பெரும்பான்மையைப் பெற்றதாகத் தெரிகிறது.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ’YouGov’ மாதிரி வாக்கெடுப்பில் சுனக்கை விட ட்ரஸ் 24 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரின் பிறப்பிடமான மத்திய இங்கிலாந்தின் கிரண்டட்டில் ஆற்றிய உரையில், "மக்களே சந்தேகமே வேண்டாம், நான் பின்தங்கியவன்" என்று சுனக் பேசியுள்ளார்.
ஒருவேளை ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு டிரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக இருப்பார். அதே நேரத்தில் சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாட்டின் முதல் தலைவராக இருப்பார்.
பாதுகாப்புச் செலவுகள் மற்றும் எரிசக்திக் கொள்கையுடன் பலர் போராடும் நேரத்தில், வரிகளைக் குறைப்பதற்கான வழிகள் மீது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனக் தனது உரையில், வரிக் குறைப்புகளுக்கு முன் பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிக்கப் போவதாக உறுதியளித்தப் பேசினார். 2030ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதமாக உயர்த்துவதாக தன்னிச்சையாக டிரஸ் வாக்குறுதி அளித்திருப்பதை சுனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.