எனக்கு 20 உனக்கு 18,மழை, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமான ஸ்ரேயா சரண் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் எக்கச்சக்கமான ஹிட் படங்களை கொடுத்து அங்கும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். விஜய்யுடன் இணைந்து நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றது இவரது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்தது. இதைத்தொடர்ந்து தமிழில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்ஸிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.



சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா நேற்று காலை தன் கணவருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் கோயில் வாசலில் முகத்தை அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஸ்ரேயாவின் கணவர் ஸ்ரேயாவுக்கு கோயில் வாசலில் நின்று முத்தம் கொடுத்துள்ளார். இதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் கோவிலில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.



அப்போது ஸ்ரேயா நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு இந்தி மற்றும் தமிழில் நடித்து வரும் படம் திரையில் விரைவில் வெளியாகும் என்றார். இந்த நிலையில் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இப்படம் இன்னும் ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாகுபலி 2 பாகங்களைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஸ்ரேயா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அது தவிர கமனம், சண்டைக்காரி என்ற இரு தமிழ் திரைப்படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். அவையும் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.


Flashback: மூன்றாவது தேர்வான சிவகார்த்திகேயன்...நாலு சீனுக்கு வந்து நடிகரான சூரி...மனதை கொத்திய மனம் கொத்தி பறவை!