நடிகரும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி, 2013-ஆம் ஆண்டு 'வணக்கம் சென்னை' மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றனர். காதல் மற்றும் காமெடி கலந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார் . பாடல்கள் படத்தில் செம ஹிட் . 




பின்னர், விஜய் ஆண்டனியுடன் 2018-ஆம் ஆண்டில் 'காளி' திரைப்படத்தை இயக்கினார். படம் வரலாற்று நிகழ்வைப்போல படமாக்கப்பட்டது . ஆனால் படம் சரியாக வெற்றி பெறவில்லை மக்களிடத்தில் ஒரு கலவையான  விமர்சனங்கள் கிடைத்தன, படத்தில் அரும்பே பலரால் இன்னும் முணுமுணுக்க பட்ட பாடல். இதற்கு பின்பு கிருத்திகா சினிமாவில் இருந்து  ஓய்வு எடுத்தார்.




கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்து அவர்களின் "நாக்கு செவந்தவரே " என்ற பாடலை இயக்கியுள்ளார் . இந்த பாடல் முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கவிப்பேரரசு வைரமுத்துவின் ”நாட்படு தேறல்” 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள். இதில் முதல் பாடலாக "நாக்கு செவந்தவரே  " வெளியானது .




சமீபத்திய அறிக்கையின்படி, கிருத்திகா தனது மூன்றாவது படத்தை  விரைவில் அறிவிப்பார். அவர் தனது அடுத்த படத்தை வேறு தயாரிப்பாளருடன்  கீழ் இணைந்து பணிபுரிய உள்ளார். முன்னதாக, அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது  மூத்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருக்கிறார் . படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வெற்றி வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெயராம் மற்றும் காளிதாஸ் ஜெயராம் அவரைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.