உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரசும் , நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்கின்றன.அவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு டேட்டாவின்  பங்கு முக்கியமானதாக உள்ளது. பொதுவாக லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் பணிபுரிபவர்களுக்கு பிராட்பேண்ட் சேவைதான் வசதியாக இருக்கும் என்றாலும், அதன் விலை அதிகம் என்பதால் பலரும் தங்கள் மொபைல் வழி இணைய சேவையை மட்டுமே பயன்படுத்துகின்றனர் . இந்நிலையில்  WORK FROM HOME  முறையை ஊக்குவிப்பதற்காக‌ பிராட் பேண்ட் திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக ஜியோ  ஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்,  எக்ஸிடெக், BSNL பாரத் ஃபைபர் உள்ளிட்ட நிறுவனங்கள் 1000 ரூபாய்க்கும் குறைவான பிராட் பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.  சில பிராட் பேண்ட் சேவைகள் டேட்டா மட்டுமல்லாது  OTT சேவையும் இணைத்து அதிரடி காட்டியுள்ளன. அதனை கீழே காணலாம் ஜியோ ஃபைபர்  பிராட் பேண்ட்: ரூ 399 திட்டம் :  இது அண்லிமிட்டட் டேட்டாவை, 30mbps  வேகத்தில் தருகிறது மேலும் இது அன்லிமிட்டட்  கால் சேவையை பெறலாம்.  ரூ 699 திட்டம் :இது அண்லிமிட்டட் டேட்டாவை, 60mbps  வேகத்தில் தருகிறது . ரூ 999 திட்டம் : இதன் மூலம் அன்லிமிட்டட் டேட்டா 120 mbps  வேகத்தில் கிடைக்கிறது. இலவச கால் சேவை மற்றும் , DISNEY + HOTSTAR , Z 5, PRIME VIDEO உள்ளிட்ட OTT தளத்திற்கான விஜபி சேவைகளை வழங்குகிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்: ரூ 499 திட்டம் : இந்த திட்டம்  மாதம் 100 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை 40 mbps வேகத்தில் அளிக்கிறது.  மேலும் விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஹங்காமா  உள்ளிட்ட பிற சேவைகளை வழங்குகிறது. ரூ 799 திட்டம்: இதன் மூலம் 70mbps   அளவிலான வேகத்தில் அன்லிமிட்டட் சேவையை பெற முடியும்,  மேலும் விங் மியூசிக்  மற்றும்  ஷா அகாடமி சேவைகளையும் பெற முடியும்.  ரூ 999 திட்டம் : இந்த திட்டம் அன்லிமிட்டட் இணைய சேவையை , 200 mbps  வேகத்தில் வழங்குகிறது . மேலும் இலவச கால் சேவையினையும் ,  DISNEY + HOTSTAR , Z 5, PRIME VIDEO உள்ளிட்ட 14  OTT தளத்திற்கான விஜபி சேவைகளை வழங்குகிறது. இதே போல BSNL ரூ499 , ரூ799, ரூ999  ஆகிய விலைகளில் தனது சேவைகளை வழங்கின்றன. இதே போல் எக்ஸிஸ்டன் ரூ 499( இந்த திட்டத்திற்கான வருடாந்திர  சேவையை பெற ரூ 5988 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது ), ரூ699 மற்றும் ரூ999 ஆகிய விலைகளில் தனது சேவையை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்தும் மாதாந்திர திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற சில தனியார் நிறுவனங்களும் இது போன்ற பிளான்கள் வழங்க தயாராகி வருகின்றன.