Bigg Boss Telugu: தெலுங்கு பிக்பாஸில் பங்கேற்ற கிரண் ஒரே வாரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 


விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண். அதைத் தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, பிரசாந்த்துடன் ‘வின்னர்’ என வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சில படங்களில் கதாநாயகியாக கலக்கிய கிரண், சில படங்களில் ஒற்றைப் பாடலுக்கு டான்ஸும் ஆடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பு இன்றி இருந்த கிரண் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பகிர்ந்து டிரெண்டானார். 


இந்த நிலையில் தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கிரண் பங்கேற்றார். இதேபோல் ஷகிலாவும் 14 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். இதனால் தெலுங்கு பிக்பாஸில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. 






ஆனால், வாமா மின்னல் என்ற கணக்கா பிக்பாஸில் நுழைந்த ஒரே வாரத்தில் முதல் ஆளாக கிரண் எவிக்‌ஷனாகி உள்ளார். பிக்பாஸில் கிரணின் ஃபர்மானஸ் பெரிதாக இல்லாததால் அவருக்கு ரசிகர்கள் ஓட்டு போடவில்லை எனக் கூறப்படுகிறது.


இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள கிரணிற்கு ஒருவர் கூடவா ஓட்டுப்போடவில்லை என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. எவிக்‌ஷன் நேரத்தில் பிரின்ஸ் யாவர் மற்றும் கிரண் இருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் பிரின்ஸ் யாவர் தப்பி கொண்டார். கிரண் வெளியேற்றப்பட்டார். முதல் வாரத்திலேயே கிரண் வெளியேறி இருப்பதால், கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். 


தெலுங்கு பிக்பாஸில் கிரண் வெளியேறி இருப்பதால், தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் 7 சீசனில் அவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று பேசப்படுகிறது. 


மேலும் படிக்க: ARRahman: இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் உள்ளே வரவில்லையா? இதை செய்யுங்க - ஏ.ஆர். ரஹ்மான் டிவீட்


Haddi Movie Review: ரத்தம் தெறிக்கும் த்ரில்லர் கதை...திருநங்கையாக அசத்தினாரா நவாசுதீன் சித்திக்.. ‘ஹட்டி’ படம் எப்படி இருக்கு?