ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடித்த தமிழ் மொழி ஃபேண்டஸி திகில் படமான கிங்ஸ்டன் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு காணலாம்.
ஆரம்பகால ட்விட்டர் விமர்சனங்களை பொறுத்தவரை, படத்தின் முதல் பாதியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் பாதியில் வரும் காட்சிகளைப் பாராட்டியுள்ளனர், மேலும் டிகர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். சிலர் 'கிங்ஸ்டன்' படத்தை ஒரு துணிச்சலான, வகையை வரையறுக்கும் படம் என்றும், மற்றவர்கள் திரையரங்குகளில் பார்க்கத் தகுந்தது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்’
படத்தின் கதை:
கிங்ஸ்டன் திரைப்படம் அச்சமற்ற கடல் கடத்தல்காரனைப் பற்றியது, அவர் தனது நண்பர்களை சாபத்தை உடைத்து, அவர்களின் சபிக்கப்பட்ட கிராமத்திற்கு நம்பிக்கையை மீட்டெடுத்தாரா இல்லையா என்பது தான். இந்தப் படம் 1982 ஆம் ஆண்டு தூவத்தோர் கடற்கரையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ், திவ்யபாரதி, சபுமோன் அப்துசமத் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் விமர்சனம்:
கிங்ஸ் திரைப்படம் நல்ல ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு உள்ளது, ஆனால் பலவீனமான கதை, மோசமான திரைக்கதை மற்றும் அழுத்தமான் காட்சிகள் இல்லை. முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது, இரண்டாம் பாதியில் லாஜிக் இல்லை, திகில் காட்சிகள் வேலை செய்யவில்லை. மந்தமான கதாபாத்திரங்கள், மோசமான எடிட்டிங் மற்றும் ஈர்க்க முடியாத இசையுடன், இந்த படம் சுமராக உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.
நாகர்கோவில் பின்னணியில் வரும் காட்சிகள் மற்றும் தமிழ் சினிமாவில் அரிதாக எடுட்க்கப்படும் கதை ஓட்டத்தில் இந்தப் படம் புராணத்தையும் சபிக்கப்பட்ட கடலின் கருத்தையும் தனித்துவமான கதையுடன் பின்னிப் பிணைக்கிறது.