பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
பாதிக்கப்பட்ட பெண் தையல் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் 14 வயது தலித் சிறுமி பல நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆசிட் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Just In




உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் 14 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு, பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பல வழிகளில் சித்திரவதை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பகத்பூர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சஞ்சய் குமார் பஞ்சால் கூறுகையில், ”சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் தோலை ஆசிட் கொண்டு எரித்துள்ளார். சிறுமியின் கையில் அமிலத்தால் 'ஓம்' என பச்சை குத்தியுள்ளார். அதோடு வலுக்கட்டாயமாக இறைச்சியை ஊட்டியுள்ளார். மேலும் சிறுமியை பல சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார் என கூறியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில், சல்மான், சுபைர், ரஷீத் மற்றும் ஆரிஃப் ஆகிய நான்கு பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகளைத் தடுக்கும்) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி சிறுமி தையல்காரரிடம் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக போலீசாரிடம் சிறுமியின் அத்தை கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை ஒரு காரில் கடத்திச் சென்று, போதைப்பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தச் சிறுமி ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது” எனத் தெரிவித்தார்.