ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள 'Kingdom of the planet of the Apes' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஃப்ரென்சு இயக்குநர் Pierre Boulle இயக்கத்தில் 1963ஆம் ஆண்டு வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பிளானட் ஆக் த ஏப்ஸ்’ (Planet Of the Apes). அறிவில் மேம்பட்ட மனிதக் குரங்குகள் எழுச்சி பெற்று மனிதர்களுக்கு எதிராக புரட்சியில் இந்தக் கதையை மையப்படுத்தி ஹாலிவுட்டில் 60கள் முதலே திரைபடங்கள் வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டு இப்படம் தொழில்நுட்ப வளர்ச்சியில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இப்படத்தின் சீரிஸ் ரீ பூட் செய்யப்பட்டு இதன் பாகங்கள் மறுபடி ரீமேக் செய்யப்பட்டன. Planet Of the Apes படத்தைத் தொடர்ந்து ரைஸ் ஆஃப் த ஏப்ஸ், டான் ஆஃப் த ஏப்ஸ், வார் ஆஃப் த ஏப்ஸ் என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


இந்தப் படங்களின் வரிசையில், தற்போது 'கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  20th செஞ்சுரி ஸ்டுடியோஸின் புதிய ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக 'கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது.  ஸ்டுடியோஸ் குளோபல், எபிக் ஃப்ரான்ஸிஸின் புதிய வருகையான இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


அறிவில் மேம்பட்ட மனிதக்குரங்கான சீசரின் ஆட்சியின் இறப்பை அடுத்து எதிர்காலத்தில் மனிதர்கள் பல ஏப்ஸ்களை ஆதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தற்போது அவை மனிதர்கள் நிழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எதிர்காலத்தை வரையறுக்க குரங்குகள் முன்னெடுக்கும் போராட்டத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் டீசர் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 


 



’கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தை வெஸ் பால் (’மேஸ் ரன்னர்’ டிரையாலஜி) இயக்கியுள்ளார் மற்றும் ஓவன் டீக் (’ஐடி’), ஃப்ரேயா ஆலன் (’தி விட்சர்’), கெவின் டுராண்ட் (’லாக் & கீ’) , பீட்டர் மேகன் (’ஷேம்லஸ்’) மற்றும் வில்லியம் ஹெச். மேசி (’பார்கோ’) ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க: Karthi on Japan Movie: எனக்கு சாதி பிடிக்காது; சென்னைல வளர்ந்தவங்க சாதி பார்க்கமாட்டாங்க - கடுப்பான கார்த்தி


Indian 2 Intro: இந்தியனுக்கு சாவு கிடையாது; கம்பேக் கொடுக்கும் சேனாபதி - வெளியானது இந்தியன் 2வின் அறிமுக வீடியோ!