Karthi on Japan Movie: எனக்கு சாதி பிடிக்காது; சென்னைல வளர்ந்தவங்க சாதி பார்க்கமாட்டாங்க - கடுப்பான கார்த்தி

"நான் சாதியை பார்த்து வளரவில்லை. அது எனக்கு பிடிக்காது. சென்னையில் வளர்ந்த யாரிடமும் சாதி பார்க்கவில்லை. நானும் அப்படி தான் வளர்ந்தேன்"

Continues below advertisement

Japan Movie Pressmeet: மெட்ராஸ் படத்தில் சாதி பார்த்து நடிக்கவில்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படம் வரும் 10ம் தேதி தீபாவளி ரிலீசாக திரைக்கு வருகிறது. ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ரிலீஸை ஒட்டி புமோஷனுக்காக படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சாதியை அடிப்படையாக வைத்து மெட்ராஸ் படம் இயக்கப்பட்டது குறித்தும், அதில் நடித்ததும் குறித்தும் கார்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கார்த்தி, ”மெட்ராஸ் படத்தை தான் சாதி படமாக பார்க்கவில்லை, ஒரு சுவரை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை என்பதால் அதன் மீது இருந்த ஆர்வத்தில் மெட்ராஸ் படத்தில் நடித்தேன். நான் சாதியை பார்த்து வளரவில்லை. அது எனக்கு பிடிக்காது. சென்னையில் வளர்ந்த யாரிடமும் சாதி பார்க்கவில்லை. சென்னையில் வளர்ந்தவங்க சாதி பார்க்கமாட்டாங்க. நானும் அப்படி தான் வளர்ந்தேன். நான் சாதி பார்க்கவில்லை, ஆனால் உங்கள் பார்வைக்கு அதில் சாதி தெரிகிறது” என்றார். 

இயக்குநர் பா. ரஞ்சித் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கதையம்சம் கொண்ட கதையை படமாக எடுப்பவர் என பெயர் பெற்றவர். அட்டகத்தி படத்துக்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில் கார்த்தி நடித்திருந்தார். சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தனது படைப்பில் கூறி இருப்பார் பா.ரஞ்சித். ஒரு சுவரை வைத்து அதை சுற்றி நடக்கும் சாதி அரசியலை கூறும் மெட்ராஸ் படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படமும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், மெட்ராஸ் சாதி அடிப்படையிலான படம் என்றும், அதில் நடித்தது குறித்தும் கார்த்தியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனாலும், தனக்கு சாதி என்பது அவசியமில்லாது என்ற பாணியில் கார்த்தி பதிலளித்துள்ளார்.

கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான் படத்தில், அனு இமானுவேல், இயக்குநர் மில்டன், சுனில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் படிக்க: Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? விஜயின் ஜோதிட கட்டங்கள் சொல்வது என்ன?

Thalaivar 171: குருவுக்கு எதிராக சிஷ்யனா.. ரஜினிக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்.. தலைவர் 171 படத்தின் முதல் சர்ப்ரைஸ்!

 

Continues below advertisement