ராங்கி தரங்கா மற்றும் தபாங் 3 உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அனுப் பந்தாரி இயக்கத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான் விக்ராந்த் ரோணா. ஒரே நேரத்தில் கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் வெளி வரவுள்ளது. கன்னட திரையுலகில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கற்பனை திரில்லர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 






கடந்த 23 ஆண்டுகளாக கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் சுதீப் தமிழில் முதல்முறையாக நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜயின் புலி மற்றும் பாகுபலி உள்ளிட்ட 3 தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே விக்ராந்த் ரோணா படம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில் படத்தின் வெளியீடு தேதியை அறிவித்துள்ளார் நாயகன் சுதீப். 


அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் 'அழுத்தமான எழுத்து, பரபரப்பான படப்பிடிப்பு.. உங்களை காண தயாராகிறான் விக்ராந்த் ரோனா. உலகமெங்கும் ஆகஸ்ட் 19ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.