இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,00,739 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564-ஆக உயர்ந்துள்ளது. 


கோவிட்-19 தொற்றுள்ள நோயாளிகளில் குணமடைவோர் விகிதம் 88.31 சதவீதமாக உள்ளது. இதுவரை, மொத்தம் 1,24,29,564 தனிநபர்கள் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். இத்துடன் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 14,71,877 (14 லட்சம்) பேராக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 93,528 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.




மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி , மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிகமான நோய்த்தொற்றை பதிவு செய்கின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு  58,952-ஆக உள்ளது. 


சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை:  


மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக  மகாராஷ்டிராவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்தப்படியாக, கர்நாடகா (85,499 ), கேரளா, தமிழ்நாடு, டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.              


 




 


நோய்த் தொற்று இரட்டிப்பாகும் காலம் :  


இரட்டிப்பு விகிதம் / காலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடக்க காலத்திலிருந்து, கடந்த ஏப்ரல் 5ம் தேதியன்று முதன்முதலாக 1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தினசரி பாதிப்புகளை இந்தியா பதிவு செய்தது. வெறும் 11 நாட்களுக்குள் இந்தியாவின் தினசரி பாதிப்பு 2 லட்சமாக எட்டியுள்ளது. 


தினசரி பாதிப்பு எண்ணிக்கையில்  ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக எட்டுவதற்கு அமெரிக்காவுக்கு 21 நாட்கள் தேவைப்படத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இறப்பு விகிதம்:  


கடந்த 24 மணி நேரத்தில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா (278), சட்டீஸ்கர் (120) டெல்லி ( 104) ஆகிய மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இறப்பு விகிதத்தைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கவலையளிக்கும் விதமாக உள்ளது. இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் (CFR)  1.23 சதவீதமாக உள்ளது.


கடந்தாண்டு ஜூன் நடுப்பகுதியில்  கொரோனா இறப்பு விகிதம் 3.33 சதவீதமாக இருந்தது. முதலாவது கொரோனா பரவலில் அமல்ப்படுத்தப்பட்ட      ஊரடங்கின் பயனாய் கொரோனா இறப்பு விகிதம் (CFR) மிகக் குறைவானது. உதரணமாக ஆகஸ்ட் 1ம் தேதியன்று இறப்பு விகிதம் 2.15% ஆக கட்டுப்படத்தப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.    




 


நோய்த் தொற்றின் இறப்பு விகிதம் குறைந்த விகிதத்தில் வைத்தால் தான், விரிவான கட்டுப்பாட்டுத் தர அணுகுமுறையின் அடிப்படையில் பயனுள்ள கட்டுப்பாட்டு உத்தி, அதிவேக சோதனை மற்றும் தரப்படுத்தப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.