இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க கடைசியாக வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாத நிலையில், அடுத்ததாக தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை, தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளிக்கு கொடுத்துள்ளார். 'வாரிசு' என இப்படத்திற்கு தலைப்பிட்டுள்ள நிலையில், இந்த படத்தை பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.


வாரிசு திரைப்படம்


அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. படக்குழுவினர் ஹைதராபாத், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.  ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்த கதையாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டடு வருகிறது. இந்த திரைப்படத்தில், புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். 



தமன் நேர்காணல்


மேலும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், குஷ்பூ, யோகி பாபு என முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் மற்றும் மூன்று லுக்குகள் வெளியான நிலையில், இந்த படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் தமன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: 'சூர்யா விருது வாங்குவார்னு ஜோசியர் சொன்னபோது சிரிச்சேன்’ - சிவக்குமார் பகிரும் சம்பவம்!


விஜயுடன் முதன்முறையாக…


முதன்முறையாக தளபதி விஜய்க்கு இசையமைக்கும் தமனை, ஒஸ்தி ஆடியோ லாஞ்சிலேயே என் படத்தில் இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி, காரில் செல்லும்போது பாட்டை கேட்டுவிட்டு, தமனுக்கு போன் செய்து நாம் சீக்கிரமா ஒரு படத்துல வேலை செய்யணும்ன்னு சொன்னார், அந்த சீக்கிரம் தான் இந்த பத்து வருஷம் என்று வேலை செய்வதற்கு எடுத்த நேரத்தை குறிப்பிட்டார் தமன்.



4,5 கீபோர்டை உடைத்துவிட்டேன்


வாரிசு திரைப்படம் பற்றி பேசுகையில், "முதல்ல ஹீரோவுக்கு ஃபேனா இருக்கணும், விஜய்க்கு ஃபேனா இல்லேன்னா வாத்தி கமிங் வராது. அதை செய்யுறதுக்கு 2,3 கீபோர்டை உடைக்கனும். வாரிசு அப்படிதான், நாங்க எல்லாருமே விஜயை ரசிகரா இருந்து ரசிக்குறவங்க. நான் ஏதாவது ட்யூன் போடுவேன், விவேக் குதிப்பார், வம்சி அவருக்கு மேல குதிப்பார். இதுவரைக்கும் 4,5 கீபோர்டை உடச்சிட்டேன். ஒரு நல்ல ஆல்பமா உருவாகிருக்கு. ஆறு பாட்டுள்ள ஒரு ஆல்பத்துல வேலை செஞ்சி ரொம்ப நாள் ஆச்சு. எல்லா வகையான எமோஷனும் நிறைந்த ஒரு ஆல்பம். அத்தனை பேர் ரசிக்கனும்ன்னா இங்க நம்ம அவ்ளோ வேலை செய்ய வேண்டியது இருக்கு. படம் குடும்ப படம்ன்றதால மியூசிக் சாஃப்டா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம், நல்லா இறங்கி வேலை செஞ்சிருக்கோம்", என்றார்.


தேசிய விருது


தமனுக்கு இருதினம் முன்பு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆல வைகுந்தபுரமுலு திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'புட்ட பொம்மா' பாடல் 15 நிமிடத்தில் உருவானது என்றும் இந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.