Home Remedies for Dark Circles: வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா - ஸ்பா ஸ்டைலில் கருவளையம் டிரீட்மென்ட் செய்யலாம்
உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது சிக்கல் இருந்தால் அது பல வகைகளில் வெளிப்படும். அதில் ஒன்று வேலை பளு காரணமாகவோ அல்லது அலைச்சல் காரணமாகவோ உடல் மிகவும் சோர்வாக உள்ளது அதற்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றால் அது முதலில் கண்களின் கருவளையம் மூலம் வெளிப்படுத்தும். இது வயதான மற்றும் ஆரோக்கியம் இல்லாத தோற்றத்தை கொடுக்கும்.
வேலைப்பளு காரணமாக நாம் அனைவரும் தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ள நேரமில்லாமல் ஊட்டச்சத்து குறைந்து காணப்படுகிறோம். இதனால் உங்கள் முகத்தில் கண்களை சுற்றிலும் கருவளையங்கள் காணப்படும். இவற்றை சில வீடு வைத்தியங்கள் மூலமே குணப்படுத்த முடியும்.
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு:
இவற்றில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் இருப்பதால் அவை கன்னங்களை சுற்றி வரும் கருவளையங்களை சரி செய்ய ஒரு நல்ல தீர்வாகவும். இந்த காய்கறிகளை கண்களை சுற்றி வைக்கும் போது கண்களின் வீக்கத்தை குறைக்கும். துருவிய உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை கண்களின் மேல் வைத்து ஒரு 10 - 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். வட்டமான துண்டுகளாக நறுக்கி அதனை கண்கள் மேல் வைத்தாலும் பலன் அடையலாம்.
பாதாம் எண்ணெய் - எலுமிச்சை சாறு:
ஒரு ஸ்பூன் பாதம் எண்ணெயில் சிறு துளிகள் எலுமிச்சை சாறு கலந்து கண்களை சுற்றிலும் மசாஜ் செய்யவும். 3 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும்.
புதினா இலை:
அரைத்த புதினா இலைகளின் பேஸ்டை இரவு தூங்குவதற்கு முன்னர் கணங்களை சுற்றிலும் போட்டுவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும்.
கற்றாழை:
கற்றாழை மிகவும் பயனுள்ள மாய்ஸ்ட்டுரைசர். சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. கண்களுக்கு கீழே கற்றாழை ஜெல்லை கண்களை சுற்றி 5 - 7 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பிறகு கழுவி விடலாம்.
தக்காளி சாறு - எலுமிச்சை சாறு:
தக்காளி சாறுடன் எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்த்து கண்களை சுற்றிலும் தடவி 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவி விடவும். இப்படி தொடர்ந்து செய்து வர கருவளையம் காணாமல் போகும்.
நல்ல தூக்கம்:
குறைந்தது 7 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும். போதிய அளவு தூக்கம் மாற்றும் ஓய்வு இருந்தாலே கருவளையம் காணாமல் போய்விடும்.