இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை விரைவில் தொகுத்து வழங்க உள்ளார். இந்தியன் 2 முடிந்தவுடன் வினோத் இயக்கத்தில் 233ஆவது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்தப் படத்தின் அப்டேட் வருவதற்குள் கமலின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் - கமல் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாகவும், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஏற்கெனவே கமலின் 234ஆவது படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சிம்பு நடிக்க இருந்த கேரக்டரை துல்கர் சல்மான் ரீபிளேஸ் செய்ய போகிறார் என்றும், படத்தில் மற்றொரு பிரபல நடிகரான ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதேபோன்று மன்மதன் அம்பு, தூங்காவனம் படங்களுக்குப் பிறகு கமலுடன் மீண்டும் த்ரிஷா இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது தனி ஒருவன் 2, சைரன் படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்ததாக கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் சேர உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 






கடந்த ஆண்டு கமலின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி நடித்திருந்தனர். கேமியோ ரோலில் ரோலக்ஸாக சூர்யா நடித்து அசத்தி இருந்தார். இப்படி மல்டி ஸ்டார்கள் நடித்த விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதை போலவே கமலின் 234 படத்திலும் மல்டி ஸ்டார் கூட்டணி இடம்பெற உள்ளது. பல நட்சத்திரங்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து சாதனை செய்த மணிரத்னம் கமலுடன் அடுத்த படத்தை எடுக்க தயாராகி உள்ளார். கமலை போல் மல்டி ஸ்டாரர் கூட்டணியில் வெளிவந்த ரஜினியின் ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 


தமிழ் திரையுலகில் மல்டி ஸ்டாரர் பார்முலா செட் ஆனதால் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் கமல் என உச்ச நட்சத்திரங்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு நடித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Swarnalatha: ’என்னுள்ளே... என்னுள்ளே..’ - காந்த குரலாக் கட்டி இழுத்த பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினம் இன்று!


Actor Vishal: மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் சாமியாடிய விஷால்.. அய்யனார் வந்துவிட்டதாக படக்குழுவினர் பரவசம்..!